புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக் விற்பனைக்கு அறிமுகம் - முழு விபரம்!

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மூன்று கேடிஎம் ட்யூக் பைக் மாடல்களில் மிக குறைவான விலை மாடல் ட்யூக் 200. இந்த பைக் பலரின் எதிர்பார்ப்புக்கும், பட்ஜெட்டுக்கு ஏதுவான மாடல். இந்த புதிய ட்யூக் 200 பைக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக்கு விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

புதிய ட்யூக் 390 பைக் போல் புதிய தலைமுறை மாடலாக அல்லாமல், ட்யூக் 200 பைக் சில சிறிய மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய ட்யூக் 390 பைக்கை போன்றே தோற்றத்தில் ஒத்திருக்கிறது புதிய ட்யூக் 200 பைக். அதேநேரத்தில், ட்யூக் 390 பைக் போன்று பிளவுபட்ட ஹெட்லைட் இல்லாமல் வழக்கமான ஒற்றை ஹெட்லைட் அமைப்புடன் எல்இடி பைலட் லைட்டுகளுடன் வந்துள்ளது. பெட்ரோல் டேங்க் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக்கு விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

மேலும், சைலென்சர் எஞ்சினுக்கு கீழ் பகுதியில் இல்லாமல் வெளிப்புறத்தில் முழுமையான சைலென்சர் அமைப்பை பெற்றிருக்கிறது புதிய கேடிஎம் ட்யூக் 200. இரு்ககைக்கு பின்புறத்தில் கொடுக்கப்படும் கிராப் ரெயில் பிடிகளும் மறுவடிவமைப்பை பெற்றிருக்கின்றன.

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக்கு விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

சாவி போடுவதற்கான இக்னிஷன் அமைப்பு பெட்ரோல் டேங்கிற்கு மாறி உள்ளது. இப்போதுள்ள ட்யூக் 200 பைக்கில் இருக்கும் அதே எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக்கு விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

பழைய கேடிஎம் ட்யூக் 200 பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த 200சிசி எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக்கு விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

முன்சக்கரத்தில் 110/70 R17 அளவுடைய எம்ஆர்எஃப் டயரும், பின்சக்கரத்தில் 150/60 R17 அளவுடைய எம்ஆர்எஃப் டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை. ட்யூக் 390 பைக் போன்று இதில் ஸ்லிப்பர் க்ளட்ச்சும் கொடுக்கப்படவில்லை.

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக்கு விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!!

புதிய கேடிஎம் ட்யூக் 200 பைக் ரூ.1.43 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது, விலையில் மாற்றம் இல்லாமல், பழைய மாடலின் விலையிலேயே விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 23, 2017, 14:07 [IST]
English summary
2017 KTM Duke 200 model launched in India. The much-awaited all new KTM 390 Duke has received major upgrades from design, specifications, and more.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+