இந்தியாவில் 2018 யமஹா எம்.டி-09 பைக் ரூ.10.88 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!
இந்தியாவில் 2018 யமஹா எம்.டி-09 பைக் ரூ.10.88 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!
2018 யமஹா எம்.டி-09 நேக்கிடு நடுத்தர மோட்டார் சைக்கிள் ரூ.10.88 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ப்ளூ கிரே சாலிட், டீப் பர்பிள் ப்ளூ மற்றும் மேட் டார்க் கிரே போன்ற புதிய நிற தேர்வுகளுடன் இந்த புதிய பைக்கை யமஹா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

பழைய மாடல் போலவே இந்த மேம்படுத்தப்பட்ட 2018 யமஹா எம்.டி-09 மாடலும் தோற்றமளிக்கிறது.
இந்தியாவில் குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டுமே இந்த பைக் கிடைக்கும் என யமஹா தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்காக யமஹா தயாரித்துள்ள சூப்பர்பைக் மாடல்கள் மிகவும் குறைவு தான். இருப்பினும் இந்த தளத்தில் மேலும் பல சூப்பர்பைக்குகளை யமஹா இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

எம்.டி-09 பைக்கிற்கான அறிமுக விழாவில் பேசிய யமஹா மோட்டார் இந்தியாவின் நிர்வாக துணை தலைவர் ராய் குரியன்,
"புதிய தொழில்நுட்பங்களை தருவதில் யமஹா நிறுவனம் எப்போது முன்னோடி தான். 2018 எம்.டி-09 பைக் சிறந்த கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ளது" என்று கூறினார்.

847சிசி 3 சிலிண்டர் எஞ்சின் பெற்றுள்ள யமஹா 2018 எம்.டி-09 பைக் 113.4 பிஎச்பி பவர் மற்றும் 87.5 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

500 முதல் 600சிசி-களை தாண்டி தற்போது அதற்கும் மேற்பட்ட திறன் பெற்ற 800சிசி வரை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காக இந்த பைக்கை யமஹா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த செக்மென்டில் யமஹா எம்.டி-09 பைக்கிற்கு சரிநிகர் போட்டியாக டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்.எஸ் மற்றும் கவாஸாகி இசட் 900 பைக்குகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








