என்எஸ்ஜி படையினர் வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் பைக் ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகம்..!!
என்எஸ்ஜி படையினர் வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் பைக் ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகம்..!!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரித்து வரும் புதிய ஸ்டெல்த் பிளாக் கிளாசிக் 500 மோட்டார் சைக்கிளை இணையத்தில் விற்பனை செய்ய உள்ளது.

ஸ்டெல்த் பிளாக் கிளாசிக் 500 இதுதான் ராயல் என்ஃபீல்டிடம் இருந்து அடுத்து வெளிவரும் புதிய மாடல் பைக்.
குறிப்பிட்ட 15 எண்ணிக்கையில் மட்டுமே இந்த பைக் விற்பனை செய்யப்படும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

மிகவும் கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த பைக்கை முதன்முதலாக பாதுகாப்பு பணியில் உள்ள கருப்பு பூணை படையை சேர்ந்த வீரர்கள் தான் இந்தியாவில் வெளியிட்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஒரு விழிப்புணர்வு பயணத்தின் போது, 15 கருப்பு பூனை படை வீரர்கள் இந்த மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் 500 பைக்கில் 8000 கி.மீ வரை பயணம் செய்தனர்.

தற்போது இந்த பைக்கிற்கான விற்பனையை ராயல் என்ஃபீல்டு இணையத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video


அதற்காக வாடிக்கையாளர்கள் www.royalenfield.com/bravehearts என்ற வலைதள முகவரிக்கு சென்று ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் 500 மாடல் பைக்கை முன்பதிவு செய்யலாம்.

புதிய ஸ்பெஷன் எடிசன் பைக்கில் பாதுகாப்பு படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் என்.எஸ்.ஜி என்ற சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

மேலும் ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் 500 பைக் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை, பெரர்னா எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.

வெறும் 15 என்ற எண்ணிக்கைகளில் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த பைக், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தான் வழங்கப்படும்.

பைக்கை வாங்க முன்பதிவு செய்வோருக்கு பிரத்யேக குறியீடு வழங்கப்பட்டு, பிறகு அதை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் விற்பனையில் பங்கேற்கலாம்.

கடந்த செப்டம்பரில் , இந்தியாவில் ஸ்டெல்த் பிளாக் 500 மாடல் பைக்கிற்கு ரூ. 2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் சென்னை) என்ற விலையில் அறிமுகமானது.

செயல்திறன் மற்றும் எஞ்சின் தேர்வுகளில் ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் 500 மாடல் கிளாசிக் 500 பைக்கை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மாடலில் 499சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் உள்ளது. இது 27.2 பிஎச்பி பவர் மற்றும் 41.3 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஸ்டெல்த் பிளாக் 500 பைக்கின் விற்பனை தொடங்கும் நாளில் ரூ. 15,000 முன்பணமாக செலுத்தி புக்கிங்கை உறுதி செய்து கொள்ளலாம்.

ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக் முன்னதாக புக்கிங் ஆகவில்லை என்றால், முன்பணம் திரும்ப கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








