ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஒகினவா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த சந்தையில் முன்கூட்டியே கால் பதித்து விடும் முனைப்பில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அந்த வகையில், குர்கான் நகரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் கால் பதித்துள்ள ஜப்பானை சேர்ந்த ஒகினவா தனது அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா பிரெய்ஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 75 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. ஒருமுறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 170 முதல் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், திருடு போவதை தடுக்கும் சென்சார் வசதி, டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் அணைப்பு, சிறப்பான அலுமினிய கலப்பு உலோக சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டர் 150 கிலோ வரை எடை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. இந்த ஸ்கூட்டரில் எலக்ட்ரானிக் அசிஸ்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது.

Recommended Video

Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலும், நீலம் மற்றும் கருப்பு வண்ண மேட் ஃபினிஷிலும், தங்க நிறம் மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலும் கிடைக்கும்.

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.59,989 எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.2,000 செலுத்தி முன்பணம் செலுத்தி பதிவு செய்து வாங்கலாம்.

ஒகினவா பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள 100 டீலர்ஷிப்புகள் வழியாக இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். விரைவில் டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒகினவா திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 19, 2017, 15:49 [IST]
English summary
Okinawa Praise Electric Scooter Launched In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+