ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள அடுத்த சம்பவம்..!!

Written By:

சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சமீபகாலமாகவே பல சிக்கல்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கிய வண்ணமாகவே உள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் மீது புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஒன்று பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

அசாம் தலைநகர் கவுஹாத்தியைச் சேர்ந்த சுமித் மந்திரி என்ற இளைஞர் கடந்த ஜூன் 9ம் தேதி தனது புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை 4 கிமீ தூரம் ஓட்டிச் சென்றுவிட்டு தன்னுடைய வீட்டின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே சென்றுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

சிறிது நேரத்திலேயே அவரின் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிவதாக தகவல் தெரிந்து, சுமித் சென்று பார்த்த போது அவரின் புதிய மோட்டார்சைக்கிள் தீயில் எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், சுமித் மிகவும் குழப்பநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் அந்த மோட்டார்சைக்கிளை வாங்கியே 3 மாதங்கள் தான் ஆகின்றது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

குழப்பத்திற்கு மத்தியிலும் இந்த பிரச்சனையை சரிசெய்ய எண்ணிய சுமித், சம்பவம் குறித்து தான் பைக் வாங்கிய ராயல் என்ஃபீல்டு ஷோரூம் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

ஆனால் அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு அவர் மேலும் அதிர்ச்சியடைந்தார் சுமித்.

"மோட்டார்சைக்கிள் ரன்னிங் நிலையில் இருந்த போது தீ விபத்து ஏற்பட்டிருந்தால் தான் அது உற்பத்தி குறைபாடாகவோ அல்லது எங்கள் நிறுவனத்தின் தவறாகவோ இருக்கக்கூடும்"

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

எனவே இது குறித்து இன்ஸூரன்ஸ் நிறுவனத்திடம் தான் முறையிட்டு நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும் என அவரிடம் ஷோரூம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"விபத்தில் தீப்பிடித்து எரிந்தது எனது பைக் மட்டும் தான், ஒருவேளை தனது உயிருக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்திருந்தால் தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தார் இதில் கவனம் செலுத்தியிருப்பார்களோ" என சுமித் விரக்தியுடன் கூறினார்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும் விதமாக இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பல கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த விபத்து உற்பத்தி குறைபாடு அல்லது வேறு ஏதேனும் காரணமாக நிகழ்ந்திருந்தாலும் கூட இந்த சம்பவம் குறித்து ராயல் என்ஃபீல்டு நிர்வாகத்தினர் கவனம் செலுத்துவது அவர்களின் கடமையாகும் என்பதை மறுக்க முடியாது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

நமது டிரைவ் ஸ்பார்க் தளத்தில் முன்னதாகவே ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உற்பத்தி குறைபாடுகள் குறித்து பல செய்திகளை பதிவிட்டுள்ளோம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைக்குனிவு..!!

இதைப் போன்ற நேரத்தில் கூட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தார் விழித்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அசொளரியங்களை சரிசெய்ய முயவில்லை எனில் அந்நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை நிச்சயம் மங்கவே செய்யும்.

English summary
Read in Tamil about parked royal enfield classic 350 catches fire.
Story first published: Wednesday, June 14, 2017, 11:07 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark