டபுள்ஸ் போவதற்கு தடையிலிருந்து தப்பிய ஹோண்டா, பஜாஜ்... சிக்கிக் கொண்ட ஹீரோ!
கர்நாடகாவில் டபுள்ஸ் போவதற்கு சில பைக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையில் இருந்து பஜாஜ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பி இருக்கினறன. ஹீரோ நிறுவனம்தான் சிக்கலி
100சிசி திறனுக்கும் குறைவான எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பதற்கு கர்நாடக அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு, 100சிசி திறனுக்கும் குறைவான எஞ்சின் கொண்ட இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடல்களான ஹீரோ ஸ்பிளென்டர், ஹீரோ பேஷன் ப்ரோ, டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஆகியவை தடை பட்டியலில் இருப்பதால், இந்த பைக்குகளை வைத்திருப்போர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது, வெறும் 2 சிசி அதிகமான திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் மாடல்களான டீலக்ஸ், ஸ்பிளென்டர் ப்ளஸ், பேஷன் ப்ரோ ஆகிய பைக்குகள் இந்த தடையில் சிக்கி இருக்கின்றன.
Recommended Video


டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டர், டிவிஎஸ் எக்ஸ்எல்100 மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ஆகியவையும் இந்த தடையில் சிக்கி இருக்கின்றன.

அதேநேரத்தில், டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மற்றும் ஜுபிடர் ஸ்கூட்டர் போன்ற மாடல்களில் 110சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுவதால் தப்பி இருக்கின்றன.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கர்நாடக அரசின் புதிய தடையால் தனது வாடிக்கையாளர்களுக்கும், தங்களது வர்த்தகத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.
ஏனெனில், 100சிசிக்கும் குறைவான திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட பைக்குகளை பதிவு செய்வதற்கு 2015ம் ஆண்டு கர்நாடக அரசு தடை விதித்தது.

எனவே, இந்த தடையை மனதில் வைத்து எஞ்சின் திறன் மற்றும் ஓட்டுனருக்கும், பின்னால் அமர்ந்து பயணிப்பவருக்கும் சிறந்த பாதுகாப்பை அளிக்கும் விதத்தில் பைக்குகளை வடிவமைத்து வருகிறோம்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Trending On DriveSpark Tamil:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் போன்றே, ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா ஆக்டிவா, ஹோண்டா ட்ரீம் வரிசை பைக் மாடல்கள் தப்பி விட்டன. காரணம், இந்த மாடல்களில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பது, ஹீரோ நிறுவனம்தான். எஞ்சினை அதிக திறன் கொண்டதாக மாற்றி பொருத்தினால் மட்டுமே இந்த தடையிலிருந்து தப்ப முடியும். எனவே, கர்நாடகாவில் ஹீரோ நிறுவனத்தின் விற்பனையில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மாடல் மட்டுமே இந்த தடையில் சிக்கியதால் பெரிய இழப்பு இல்லை. பட்ஜெட் இருசக்கர வாகன மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டாவும் இந்த தடை உத்தரவிலிருந்து தப்பி இருக்கிறது.

இதனிடையே, 100சிசிக்கும் குறைவான எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வைத்திருப்போர் மத்தியில் இந்த தடை உத்தரவு எதிர் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. சாதாரண மக்கள் அதிக அளவில் இந்த வகை இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதால், இந்த தடை தினசரி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

தடைக்கான காரணம்
கடந்த 2009ம் ஆண்டு மைசூருவில் நடந்த சாலை விபத்தில் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்த ஹேமந்த் என்ற சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் உயிரிழப்பிற்கு இழப்பீடு கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்த விசாரணை நடத்திய கர்நாடக உயர்நீதிமன்றம், மோட்டார் வாகனச் சட்டம் 143[3]ஐ சுட்டிக் காட்டி, 100சிசிக்கும் குறைவான எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களில் பின் இருக்கக் கூடாது என்றும், அதனை கட்டாயமாக்கவும் அறிவுறுத்தியது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








