டிசி டிசைன் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

Written By:

மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் சிறந்து விளங்குகிறது. பிரபல நடிகர்களுக்கு நடமாடும் இல்லத்தை பஸ்களில் கட்டித் தந்து வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக இருசக்கர வாகனத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கிறது டிசி டிசைன் நிறுவனம்.

டிசி டிசைன் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு 500சிசி மோட்டார்சைக்கிளை பழமையான மோட்டார்சைக்கிள் போன்ற தோற்றத்துடன் டிசி நிறுவனம் கஸ்மடைஸ் செய்துள்ளது. டிசி2 கார்பன் ஷாட் என்ற பெயரில் இந்த கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று கஸ்டமைஸ் செய்து தருவதற்கு மோட்டார்சைக்கிள் விலையுடன் ரூ.76,000 கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசி டிசைன் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

குட்டையான முன்புற மட்கார்டு, க்ரோம் வளையம் போடப்பட்ட ஹெட்லைட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெட்ரோல் டேங்க், ஒற்றை இருக்கை, குட்டையான வால்பகுதி தோற்றத்தை தரும் பின்புற மட்கார்டு என முற்றிலும் வேறுபட்ட தோற்றத்திற்கு அந்த மோட்டார்சைக்கிளை மாற்றி இருக்கிறது டிசி நிறுவனம்.

டிசி டிசைன் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ஹாலஜன் பல்புகளுக்கு பதிலாக எல்இடி பல்புகள் ஹெட்லைட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்டிகேட்டர் டிசைனும் சிறிய உருளை போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிசி டிசைன் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

பக்கவாட்டில் பேட்டரி பெட்டிக்கு வெளிப்புறத்தில் க்ரோம் பூச்சுடன் கூடிய கூடுகளுடன் மறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பழமையான மோட்டார்சைக்கிள் போன்ற தோற்றத்துடன் மாற்றங்கள் கண்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு 500 மோட்டார்சைக்கிள்.

டிசி டிசைன் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

சஸ்பென்ஷன், ஃப்ரேம், ஹேண்டில்பார், சக்கரங்கள், டயர்கள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

டிசி டிசைன் கைவண்ணத்தில் உருமாறிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

மொத்தம் 5 பாடி கிட்டுகள் இதே டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு மோட்டார்சைக்கிளின் மொத்த அடக்க விலையாக ரூ.2.50 லட்சம் என்று தெரிகிறது.

கட்டுமஸ்தான்... புதிய டுகாட்டி டயாவெல் டீசல் சூப்பர் பைக்!

புதிய டுகாட்டி டயாவெல் டீசல் சூப்பர் பைக்கின் படங்களை கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

English summary
Retro Stylen Royal Enfield 500 By DC Design.
Story first published: Thursday, January 19, 2017, 16:41 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos