650 திறன் பெற்ற எஞ்சினில் இரட்டையர்களை பெற்றடுத்த ராயல் என்ஃபீல்டு... முழுத் தகவல்கள்..!!
650 திறன் பெற்ற எஞ்சினில் இரட்டையர்களை பெற்றடுத்த ராயல் என்ஃபீல்டு... முழுத் தகவல்கள்..!!
சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு வெளியிட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 மோட்டார சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

முதன் முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரு மாடல் பைக்குகளும் ரைடர் மேனியா 2017 விழாவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வந்தது.

பழைய கால பைக்குகளுக்கான தோற்றத்தில் மிகவும் கம்பீரமாக இனடர்செப்டார் 650 மாடல் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்படியே நேர் மாறாக கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக் முழுமையாக ஒரு கஃபே ரேசர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது பயன்பாட்டில் இருக்கும் கான்டினென்ட்டல் ஜிடி 535 பைக்கை விட இந்த புதிய மாடல் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

புதிய கான்டினென்ட்டல் ஜிடி-யின் புதிய வடிவமைப்பு, வெறும் 5 சதவீதம் மட்டுமே பழைய மாடல் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கும் என்று ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.
Recommended Video


கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக்கில் 270 கோணத்தில் ஃபைரிங் ஆர்டர் மற்றும் ஏர்-கூல்டு கொண்ட 648சிசி திறன் பெற்ற எஞ்சின் உள்ளது.

பேரலல் ட்வின் எஞ்சினான இது கான்டினென்ட்டல் ஜிடி பைக்கில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எஞ்சினை விட மென்மையான அதிர்வுகளை மட்டுமே ஏற்படுத்தும்.

ப்ரோடோடைப் மற்றும் மூன்று வித கிரான்க் செட்டப் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 650சிசி பேரலல் ட்வின் எஞ்சின் 47 பிஎச்பி பவர் மற்றும் 52 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக் முதற்கட்டமாக ஐரோப்பாவில் வெளியிடப்படும்.

அங்கு ஏப்ரல் 2018ம் முதல் விற்பனைக்கு வரும் இந்த இரண்டு மாடல் பைக்குகளும், அடுத்த நிதியாண்டின் தொடக்கமாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








