தென்கிழக்காசிய சந்தையில் தீவிரம் காட்டும் ராயல் என்ஃபீல்டு... வியட்நாம் நாட்டில் புதிய கிளை..!!
தென்கிழக்காசிய சந்தையில் தீவிரம் காட்டும் ராயல் என்ஃபீல்டு... வியட்நாம் நாட்டில் புதிய கிளை..!!
இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு, அடுத்ததாக வியட்நாம் சந்தைக்குள் கால்பதித்துள்ளது.

தென்கிழக்காசிய நாடான வியட்நாமில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ள ராயல் என்ஃபீல்டு, சென்னை ஆலையில் தயாராகும் அதன் பைக்குகளை அங்கே விற்பனை செய்யவுள்ளது.

நடுத்தர ரக மோட்டார் சைக்கிள் விற்பனையில் 250 சிசி முதல் 750சிசி வரை வாகன விற்பனை சந்தையில் சிறப்பான இடத்தில் இருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

பல்வேறு சர்வதேச சந்தையில் முன்னிலை விற்பனை பெற்று வரும் இந்நிறுவனம், தற்போது மோட்டார் சைக்கிள் மாடல்களை பல நாடுகளில் விரிவுப்படுத்தி வருகிறது.

உலகின் நான்காவது மோட்டார் சைக்கிள் சந்தையாக தற்போது வியட்நாம் இருக்கிறது. இங்கு பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை உணர்ந்து தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம், வியட்நாமின் ஹோ சி மின் என்ற நகரத்தில் தனது முதல் விற்பனை & சேவை மையத்தை திறந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் பிரத்யேகமாக மையமாக செயல்படும் அதில், முதற்கட்டமாக 500சிசி பிரிவில் உள்ள மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி, 500சிசி பிரிவில் உள்ள புல்லட் 500, கிளாசிக் 500, கான்டினென்ட்டல் ஜிடி ஆகிய மூன்று மாடல்கள் வியட்நாமில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்கிறது.

இதற்கு அடுத்தப்படியாக 350சிசி மாடல்களான ஹிமாலயன் உட்பட சில பைக்குகள் வியட்நாமில் ராயல் என்ஃபீல்டு அங்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ராயல் என்ஃபீல்டு வியட்நாமில் கால்பதித்துள்ளதை பற்றி அந்நிறுவனத்தின் தலைவர் ருத்ரேஜ் சிங் கூறும்போது,
"நடுத்தர வாகன விற்பனையை பொறுத்தவரை தற்போது ராயல் என்ஃபீல்டு சர்வதேசளவில் நல்ல விற்பனை திறனை பெற்று வருகிறது"

"அதை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் வியட்நாமில் கால்பதிக்கும் ராயல் என்ஃபீல்டு தென்கிழக்காசிய சந்தையில் முக்கிய நிறுவனமாக இருக்கும்" என்றார் அவர்.


Click it and Unblock the Notifications








