புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் அறிமுக விபரம்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களின் அறிமுக விபரம் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் இத்தாலியின் மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இதனை இரட்டையர்களாக ராயல் என்ஃபீல்டு குறிப்பிடுகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யும் காலம் மற்றும் இதர விபரங்கள் இப்போது வெளியாகி உள்ளன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களையும் ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சத்திற்கும் இடையிலான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
Recommended Video


ரோட்ஸ்டெர் ரகத்தில் வரும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளும், கஃபே ரேஸர் ரகத்திலான கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளும் மிக நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கின்றன.

இந்த மோட்டார்சைக்கிளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய 650சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 46.3 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்த மோட்டார்சைக்கிள்களில் ஸ்லிப்பர் க்ளட்ச், டிஸ்க் பிரேக் சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நுட்பம் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் இந்திய ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்கட்டமாக ஐரோப்பிய மார்க்கெட்டிலும், அடுத்து இந்தியாவிலும் களமிறக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








