ராயல் என்ஃபீல்டு பைக்கில் பெரிய சைலன்சர் இருந்தால் ஒரே போடு..!!

Written By:

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஓட்டுவது என்பது மிகவும் சிலிர்ப்பான அனுபவத்தை தரக்கூடியவை.

அதுவும் பிரம்மிக்கவைக்கும் ஒலி எழுப்பும் எக்ஸாஸ்ட் பம்ப் இருந்தால் ராயல் என்ஃபீல்டு ஓட்டுவதே கெத்து தான்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

இப்படி வண்டி ஓட்டுவது நமது வேலையாக இருந்தாலும். அதை எப்படி ஓட்டவேண்டும் என்று முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறது சட்டம்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

ஊரே அதிரும்படியான ஒலியை எழுப்பும் எக்ஸாஸ்ட் பைப்புகளுக்கு போக்குவரத்து விதிகளில் அனுமதி இல்லை. மேலும் அதை பைக்குகளில் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானாது.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

ஆனால் பைக் ஆர்வலர்கள் இதையெல்லாம் கண்டுகொள்வது கிடையாது. அதிரடி ஒலியை உருவாக்கும் சைலன்சர்களை பைக்குகளில் பொருத்தும் நடவடிக்கை அதிகரிக்கத்தான் செய்கிறது.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

பல்வேறு மாநிலங்களில் இதை தடுப்பதற்கான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், காவல்துறை அதிகாரிகள் லவுடுஸ்பீக்கர்களில் கத்தினாலும், பெரிய எக்ஸாஸ்ட் பைப்புகளி பொருத்துவது தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.

Recommended Video
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

இதற்கான சட்டங்களை கடுமையாக்க கோரி பல்வேறு பொதுநல மனுக்கள் பூனே, மைசூரு, பெங்களூரு மற்றும் கொச்சி உட்பட பல்வேறு நகரங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

இந்தியாவின் பல்வேறு மாநில போலீசார், குறிப்பாக ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மற்றும் அதன் சைலன்சர்கள் மீது அதிக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

சைலன்சரை மாடிஃபிகேஷன் செய்திருந்தால், அதை உடனே கைப்பற்றி, போக்குவரத்து விதிமீறல் செய்த ஓட்டுநர் மீது 190 (2) மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

பெங்களூரு நகரத்தில் பெரிய சைலன்சர் பொருத்திய வாகனங்களை பிடிக்க, அந்நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு காவல்படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்.

Trending On Drivespark:

தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி வெளியானது!

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

இதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு பணிகளின் போது சுமார் 11 ராயல் என்ஃபீல்டு பைக்குகள், சைலன்சர் பொருத்துவதில் முறைகேடு செய்திருப்பதாக கூறி கைப்பற்றப்பட்டுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

11 வாகனங்களுக்கும் அபராதம் மற்றும் வழக்குகள் போடப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளது என பெங்களூரு போலீசாரின் அதிகாரப்பூர்வ வலைதளம் செய்தி தெரிவிக்கிறது.

இதுபோன்ற பைக்குகள் கைப்பற்றப்பட்டால், சம்பவ இடத்திலேயே ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

மேலும் உரிமையாளரின் கண்முன்னே பெரிய சுத்தியல்கள் வைத்து முறைகேடான சைலன்சர்களை உடைக்கப்படுகின்றன.

பூனே நகர காவல்துறை அதிகாரிகளும் பெரிய சைலன்சர் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

கடந்த ஜூலையில் 14 முதல் 16ம் தேதி வரை பூனே நகர போலீசார் எடுத்த அதிரடியான நடவடிக்கைகள் மூலம் சுமார் 180 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் இந்த மூன்று நாட்கள் சோதனையின் மூலம் சுமார் ரூ. 36,200 பூனே போலீசார் அபராதம் வசூலித்துள்ளனர்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை பொருத்துவது மேட்டுக்குடியான மனப்பான்மையாக தெரியலாம்.

ஆனால் அதனால் ஏற்படும் ஒலி மாசு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

வண்டியை ஓட்டும் உங்களுக்கே எதிர்காலத்தில் பிரச்சனையாக இருக்கும். உங்களது குடும்பாதாருக்கும் இது பெரிய சிக்கலை உருவாக்கும்.

அதிக ஒலி எழுப்பும் சைலன்சருக்கு புது வேட்டு வைத்த காவல்துறை!

எல்லாவற்றிலும் உற்சாகமான மனபோக்கு என்பது இருக்க வேண்டியதுதான். அதுதான் நல்லதும் கூட. ஆனால் அதனால் மற்றவருக்கு துன்பமும், தொந்தரவு ஏற்படும் என்றால் உங்களது நடவடிக்கையில் நிச்சயம் மாற்றம் தேவை.

English summary
Read in Tamil: Royal Enfield bikes is a pleasure for everyone, but riding with bigger sounding silencer is offense. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos