இந்திய பைக் சந்தையை துவம்சம் செய்ய 2018ல் அறிமுகமாகும் ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக்..!!
இந்திய பைக் சந்தையை துவம்சம் செய்ய 2018ல் அறிமுகமாகும் ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக்..!!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரித்துள்ள 750சிசி பைக் மாடலுக்கான ஸ்பை படங்கள் கசிந்துள்ளன.
இதனால் 750சிசி திறன் பெற்ற இந்த பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 750சிசி திறன் பெற்ற பைக்கை தயாரிப்பதாக தெரிவித்த உடன், உலகளவில் பெரிய எதிர்பார்ப்புகள் உடனே எழுந்தன.
குறிப்பாக இந்திய சந்தையில் 750சிசி பைக் வெளிவந்த உடன் அதை உடனே புக் செய்து விட காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது.

இப்படி ஏகத்துக்கும் பைக் ஆர்வலர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக், பல்வேறு மாடல்களில் வெளியாகும் என்றும் பேரலல்-ட்வின் சிலிண்டர் எஞ்சினில் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video


இதை உறுதிப்படுத்தும் விதமாக 750சிசி பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்மூலம் எஞ்சினுக்கான செயல்திறன் தெரியவில்லை என்றாலும்,
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்டேன்டர்டு மாடலுக்கான சேசிஸ் கொண்டு கஃபே ரேசர் உடன் 750 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

750சிசி திறனில் தயாரிக்கப்படும் கஃபே மற்றும் ஸ்டான்டர்டு மாடல் பைக்குகளில் இருக்கை மற்றும் ஃபியூல் டேங் அமைப்புகளில் தான் மாற்றம் உள்ளது.

வழக்கமான ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் மாடல் போன்று தான் ஸ்டான்டர்டு காட்சியளிக்கிறது. கஃபே ரேசர் மாடலுக்கு எப்போதும் போல ஒற்றை இருக்கை முறை வழங்கப்பட்டுள்ளது.

750 ஸ்டான்டர்டு மாடலில் வழக்கமான ஹேண்டில் பார் அம்சமும், கஃபே ரேசருக்கு க்ளிப்-ஆன் வகை ஹேன்டில்பார் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கால் வைக்கும் துணைப்பொருளுக்கு வித்தியாசமான வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், வாகனங்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குபடியான புதிய தேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வெளியான ஸ்பை படங்களில் கஃபே ரேசர் 750சிசி பைக் மாடல் பைரௌலி ஸ்போர்ட் டிமான் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல ஸ்டான் டர்டு மாடல்களில் பைரௌலி ஃபேந்தம் ரப்பர் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்டர்டு மற்றும் கஃபே ரேசர் மாடல்களில் செயல்திறன் மற்றும் செயல்பாட்டு திறனில் பெரியளவில் தயாரிப்பு பணிகளில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக், இம்மாதம் நடைபெறவிருக்கும் இ.ஐ.சி.எம்.ஏ கண்காட்சியில் இடம்பெற்று, இந்தியாவில் 2018ல் விற்பனைக்கு வரலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.


Click it and Unblock the Notifications








