புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ் மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 500சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 500சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. படங்களையும், தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

கடந்த மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு புதிய மாடல்களும் இத்தாலியில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

அடுத்த சில மாதங்களில் இந்த இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதற்கிடையே, மற்றுமொரு புத்தம் புதிய மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. டீலர்ஷிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த புதிய மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்களை ரஷ்லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

ராயல் என்ஃபீல்டு 500எக்ஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிளின் ஹேண்டில்பார் அமைப்பு, இருக்கை அமைப்பு, அலாய் வீல்கள் போன்றவை கஸ்டமைஸ் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் போன்ற தோற்றத்தை தருகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை வாங்கும் பலர் அதனை வேறு ரூபத்திற்கு மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அத்துடன், தனியார் கஸ்டமைஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை உருமாற்றுகின்றனர்.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

அதுபோன்ற கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் பிரியர்களை கவரும் விதத்தில், இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

பெட்ரோல் டேங்க் மட்டும் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களிலும், ஏனைய பகுதிகள் கருப்பு வண்ணத்திலும் இருப்பதால் கவர்ச்சிகரமாக காட்சி தருகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கை அமைப்பு மிக சவுகரியமான இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. வால் பகுதி சற்றே மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

தண்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிளின் ஹெட்லைட், டெயில் லைட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், எல்இடி பல்புகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. எஞ்சின், புகைப்போக்கி, சஸ்பென்ஷன் ஆகியவை மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

மொத்தத்தில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் போன்று காட்சி தருகிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

இந்த மோட்டார்சைக்கிளில் 500சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மோட்டார்சைக்கிளில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

மிக நீண்ட காலத்திற்கு பிறகு வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், தண்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட்டை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது வரவேற்கத்தக்கது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ்... செம செக்ஸீ!

வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்பது கணிப்பு.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Wednesday, December 27, 2017, 11:03 [IST]
English summary
Royal Enfield will introduce the new variant of the Thunderbird 500 christened as Thunderbird 500X. The new motorcycle has been spotted at a dealership, and Rushlane has got hold of the images of the new motorcycle in its production avatar.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+