டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்: சோதனை ஓட்ட படங்கள்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய தலைமுறை டிவிஎஸ் அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் டிவிஎஸ் அப்பாச்சி 160ஆர்டிஆர் இளைஞர்களின் மனம் கவர்ந்த மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், சந்தையில் போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில், அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக் மேம்படுத்தப்படுகிறது.

வடிவமைப்பு, சிறப்பம்சங்களில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்படும் புதிய அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக் தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களில் இருக்கிறது. அவ்வாறு சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக்கின் வீடியோ ஒன்று யூ-ட்யூபில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகளுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டம்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை இருக்கை அமைப்புக்கு பதிலாக ஸ்பிளிட் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அப்பாச்சி 200 4வி பைக் மாாடல் போன்ற பக்கவாட்டில் சில்வர் வண்ண பேனல்கள் முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கின்றது.

புதிய அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக்கில் இருக்கும் எஞ்சின் சற்று கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா ஹார்னெட், சுஸுகி ஜிக்ஸெர், யமஹா எஃப்இசட்-எஸ் மற்றும் அண்மையில் அறிமுகமான பஜாஜ் பல்சர் என்எஸ்160 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் இந்த புதிய தலைமுறை டிவிஎஸ் அப்பாச்சி 160ஆர்டிஆர் பைக் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








