தமிழர்களுக்கு அதிகம் பிடித்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் இது தான்..!!

Written By:

இந்தியாவின் 3வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கும் தமிழகத்தில் எந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகின்றன என தெரிந்து கொள்ளலாம்.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

விற்பனையாகும் மொத்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய சந்தை தமிழ்நாடு தான்.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

இதே போல ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

தற்போது தமிழ்நாட்டிலேயே எந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகிறது அல்லது எந்த இருசக்கர வாகன பிராண்டு தமிழர்களுக்கு பிடித்தமானது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

மகராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா மாநிலங்களைத் தொடந்து தற்போது தமிழகத்திலும் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன பிராண்டாக ஹோண்டா உயர்ந்துள்ளது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2017-18 நிதி ஆண்டை சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு தற்போது முதல் இட அரியணையை ஹோண்டா நிறுவனம் பிடித்துள்ளது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் பிரிவின் வளர்ச்சி 2% ஆக உள்ளது. தற்போது இந்த வளர்ச்சியைக் காட்டிலும் ஹோண்டா நிறுவனத்தின் வளர்ச்சி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி விகிதம் 34% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 35% பங்களிப்பை இந்தியாவில் இந்நிறுவனம் அளிக்கிறது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

தமிழ்நாட்டில் இருசக்கர வாகனம் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரிலும் ஒருவர் ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏதேனும் ஒன்றை வாங்குவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

தமிழ்நாட்டில் ஸ்கூட்டர் வாங்குவோர் எண்ணிக்கை சமீபகாலத்தில் பல மடங்காக உயர்ந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

சொகுசு, சமீபத்திய தொழில்நுட்பம், பெண்கள், சிறியவர்கள், வயதானவர்கள், ஆண்கள் என அனைவரும் விரும்பி வாங்குவதால் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

அதிலும் குறிப்பாக ஸ்கூட்டர் கலாச்சாரம் தமிழகத்தில் வளர்ந்து வருவதும் ஹோண்டா நிறுவனத்தின் இந்த முதல் இட அரியணையை பிடிக்க துணை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் விரும்பி வாங்கும் இருசக்கர வாகன பிராண்டு இது தான்..!!

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா125 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல இந்நிறுவனத்தின் ஆக்டிவா4ஜி, டியோ, ஏவியேட்டர், ஆக்டிவா-ஐ ஆகிய ஸ்கூட்டர்களும் பிரபலமான மாடல்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tmail about Tamilnadu's best selling two wheeler brand

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark