ராயல் என்ஃபீல்டு பைக்கை எப்படி திருடுவது?? போலீசாருக்கு பகீர் கிளப்பிய அல்ட்ரா மார்டன் திருடன்..!!

Written By:

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவது போலவே, தினம் தினம் மோட்டார் வாகன திருட்டு சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

நமது தேவைக்கு பிறகு வாகனங்களை பார்க் செய்துவிட்டு, அந்த இடம் பாதுகாப்பாகத்தான் உள்ளதா என்பதை உறுதி செய்து, அங்கிருந்து நகர்வதற்குள், போதும் போதும் என்றாகி விடுகிறது.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

வாகனங்களின் பூட்டுக்கள் மேம்படுத்தப்பட்டு வருவதற்கு இணையாக அதை லாவகமாக உடைத்து திருடும் நுட்பங்களையும் இன்றைய வாகன திருடர்கள் நன்றாக கற்று வைத்திருக்கிறார்கள்.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

சமீபத்தில் இணையதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று, ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் மீதான நம்பகத்தன்மையை சற்று உரசி பார்க்கும் வகையில் பகீர் கிளப்புகிறது.

Recommended Video - Watch Now!
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

வீடியோவில் கையில் போலீஸ் விலங்குடன் இருக்கும் இளைஞன், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல் பைக்கை அழுத்தி பிடித்து ஒரு திருப்புதிருப்புகிறான், உடனே அதுனுடைய சைடு லாக் திறந்து விடுகிறது. இத்தனைக்கும் பைக்கில் சாவி இல்லை.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

பிறகு சாவி போடும் இடத்தில் எந்தவித உபகரணங்களும் இல்லாமல், சில வயரிங் வேலைகளை பார்த்துவிட்டு, அந்த இளைஞன் அசால்ட்டாக பைக்கை ஸ்டார் செய்கிறார். அப்போதும் பைக்கில் சாவி இல்லை.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

இந்த காட்சியை அரங்கேற்றிய இந்த இளைஞன் ஒரு திருடன். இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் நடைபெற்ற வாகன திருட்டில் இவன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

பாதுகாப்பானதாக விளம்பரப்படுத்தப்பட்டு, இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெற்று வரும் ராயல் என்ஃபீல்டு பைக்கை, 5 நிமிடங்களில் திருடுவது எப்படி என்பது தான் இந்த வீடியோ.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

சமீபத்தில் போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டிய இந்த இளைஞனிடம், போலீசார் நடத்திய விசாரணையின் போது ராயல் என்ஃபீல்டு பைக்குகள் திருடும் விதத்தை வீடியோ வாக்குமூலத்திற்கு அந்த இளைஞன் செய்து காண்பித்துள்ளான்.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

அதே சமயத்தில் கைப்பேசி வாயிலாக யாரோ ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, எவ்வாறோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி, ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது.

ஒரு சிறிய உந்துதலுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் ஹேண்டில் பாரை எளிதில் உடைத்துவிடலாம்.

அதேபோல சாவியே இல்லாமல், பைக்கின் எஞ்சினை இயக்கலாம் என்பன போன்ற தகவல்கள் இந்த வீடியோ மூலம் நமக்கு தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்பிலேயே அதிக விற்பனை திறனை பெற்ற மாடல் என்றால் அது கிளாசிக் 350 தான்.

ராயல் என்ஃபீல்டு பைக் திருடனின் வீடியோ வாக்குமூலம்..!!

வைரலாகி வரும் இந்த வீடியோவின் காரணமாக தற்போது கிளாசிக் 350 வாடிக்கையாளர்கள், வீடியோவிற்கான கமென்டு பாக்ஸில் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Robbers love Royal Enfield, So that the Stealing Process also very Easy. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark