ஐபோன்- X போனுக்கு இணையான விலையில் சிறந்த 10 பைக் மாடல்கள்!

ஆப்பிள் ஐபோன்-X ஸ்மார்ட்போன் ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் வெளி வர இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்த நிலையில், அதனைவிட குறைவான விலையில் கிடைக்கும் இந்தியாவின் சிறந்த 10 பைக், ஸ்கூட்டர் மாடல்களை இந்த செய

By Saravana Rajan

கார்களில் புகாட்டி, பைக்குகளில் டுகாட்டி என ஒவ்வொருக்கும் இந்த பிராண்டு தயாரிப்புகளை வாங்குவது வாழ்நாள் கனவாக இருக்கும். தரம், சிறப்பம்சங்கள், அந்தஸ்து என ஒவ்வொன்றின் அடிப்படையில் இந்த பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், ஸ்மார்ட்போன் பிரியர்களின் கனவு பிராண்டு ஆப்பிள் ஐபோன். அண்மையில் ஐபோன்-X வருகை குறித்த வீடியோ ஒன்றை யூ- ட்யூபில் காண நேரிட்டது. ஐ-போன் வரிசையில் மிக உயர்தர மாடலாக வரும் ஐ-போன் 10 போன் ரூ.1 லட்சம் விலையில் வருவதாக தகவல் சொல்லப்பட்டது.

 ஐபோன்- X போனுக்கு இணையான விலையில் சிறந்த 10 பைக் மாடல்கள்!

இருப்பினும், ஒரு ஸ்மார்ட்போனுக்கு இந்த விலை என்பது கொஞ்சம் ஓவராகத்தான் கருத முடியும். ஐ-போன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றேன்; ஈரலை விற்றேன் என்ற செய்திகள் அடிபடுவது வழக்கம். ஆனால், புதிய ஐபோன்- X அறிமுகம் செய்யப்பட்டவுடன் இதுபோன்ற செய்திகள் அதிகம் வர வாய்ப்புண்டு.

 ஐபோன்- X போனுக்கு இணையான விலையில் சிறந்த 10 பைக் மாடல்கள்!

ஏனெனில், அதன் விலை அப்படி. இந்த வேளையில், ஐபோன்- X விலைக்கு இணையான விலையில், இங்கே பல சிறந்த பைக் மாடல்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதில், இந்தியாவின் சிறந்த 10 பைக் மாடல்களின் விபரங்களை உங்கள் பார்வைக்கு வழங்க இருக்கிறோம். ஐபோன்-X முன்பதிவு செய்வதற்கு முன், இந்த பட்டியலை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.

01. ஹோண்டா ஆக்டிவா 125

01. ஹோண்டா ஆக்டிவா 125

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.67,128

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கான மதிப்பு நீங்கள் அறிந்ததே. டிசைன், செயல்திறனில் கலக்கலான இந்த ஸ்கூட்டர் இப்போது நகர்ப்புற மக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது. இந்த ஸ்கூட்டர் டிஸ்க் பிரேக் மாடலிலும் கிடைக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் 8.5 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த ஸ்கூட்டருக்கு சிறந்த மறுவிற்பனை மதிப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்க.

 02. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்

02. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.91,828

மிக ஸ்டைலான இந்த பைக் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எல்இடி டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சிறந்த எஞ்சின் ஆகியவை இதன் சிறப்புகள்.

ஹோண்டா ஹார்னெட் 160 பைக்கில், 15.7 பிஎச்பி பவரையும், 14.76 என்எம் டார்க்கையும் வழங்கும் 163சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள் டிஸ்க் மற்றும் டியூவல் டிஸ்க்குகள் கொண்ட சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடல்களில் கிடைக்கிறது. மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

03. பஜாஜ் அவென்ஜெர் 220

03. பஜாஜ் அவென்ஜெர் 220

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.1,02,222

க்ரூஸர் ரகத்தில் இந்தியாவின் விலை குறைவான மோட்டார்சைக்கிள் மாடல். இந்த மோட்டார்சைக்கிள் 150சிசி மற்றும் 220சிசி எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மிக சிறப்பான வண்ணங்களில் கிடைக்கிறது.

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற இருக்கை அமைப்பு, 19.03 பிஎஸ் பவரை அளிக்க வல்ல 220சிசி எஞ்சின் ஆகியவை இதன் சிறப்பு. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இந்த மோட்டார்சைக்கிளில் 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

04. பஜாஜ் பல்சர் 220எஃப்

04. பஜாஜ் பல்சர் 220எஃப்

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.1,05,279

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்கில் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் மாடல்களில் ஒன்று. மிக நேர்த்தியான டிசைன், செயல்திறன் இந்த பைக்கின் முக்கிய சிறப்புகள். மிக சவுகரியமான இருக்கை அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இதன் இதர சிறப்பம்சங்கள்.

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் 20.65 பிஎச்பி பவரையும், 18.55 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 220சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 134 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

05. பஜாஜ் பல்சர் 160 என்எஸ்

05. பஜாஜ் பல்சர் 160 என்எஸ்

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.92,666

பஜாஜ் பல்சர் வரிசையில் லேட்டஸ்ட் வரவு பல்சர் என்எஸ்160 பைக். மிரட்டலான ஸ்டைல், செயல்திறன் மிக்க எஞ்சின், சிறப்பான மைலேஜ் இதன் சிறப்பம்சங்கள்.

இந்த பைக்கில் 15.5 பிஎஸ் பவரையும், 14.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 160சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் சுவிட்சும் உண்டு.

06. சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்

06. சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.99,876

மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுஸுகி ஜிக்ஸெர் பிராண்டில் வெளிவரும் செமி ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் பைக் மாடல். இந்த பைக்கின் டிசைன், ஸ்டிக்கர் போன்றவை எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது.

இந்த பைக்கில் 14.8 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது.

07. யமஹா எஃப்இசட்- எஸ் வெர்ஷன் 2.0

07. யமஹா எஃப்இசட்- எஸ் வெர்ஷன் 2.0

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.94,988

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் மிக மிரட்டலான டிசைனில் கிடைக்கும் பைக் மாடல்களில் ஒன்று யமஹா எஃப்இசட்-எஸ் வி2.0. இந்த பைக்கின் கூர்மையான ஹெட்லைட் அமைப்பு, பெட்ரோல் டேங்க், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கச்சிசமான சைலென்சர் என அனைத்தும் கவர்ச்சியானவை.

இந்த பைக்கில் 13.2 பிஎச்பி பவரையும், 12.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 149சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 107 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

08. டிவிஎஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

08. டிவிஎஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.1,05,898

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் மாடல் மிகச் சிறந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. டபுள் பேரல் மஃப்ளர் அமைப்பு மூலமாக அலாதியான சைலென்சர் சப்தத்தையும், குறைவான புகை வெளியேற்றத்தையும் கொடுக்கிறது.

இந்த பைக்கில் இருக்கும் 198சிசி எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. சராசரியாக லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

08. பஜாஜ் பல்சர் என்எஸ்200

08. பஜாஜ் பல்சர் என்எஸ்200

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.1,08,543

பஜாஜ் நிறுவனத்தின் நேக்கட் பாடி ஸ்டைல் பைக் மாடல் இது. தற்போது ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், பிஎஸ்-4 எஞ்சினுடன் கிடைக்கிறது. இதன் டிசைன் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஒன்று.

இந்த பைக்கில் ட்ரிப்பிள் ஸ்பார்க் நுட்பத்திலான 199.5சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 23.17 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 135 கிமீ வேகத்தில் செல்லும்.

10.ஹோண்டா யூனிகார்ன் 150

10.ஹோண்டா யூனிகார்ன் 150

சென்னை ஆன்ரோடு விலை: ரூ. 80,788

சிறந்த டிசைன், செயல்திறனும், மென்மையும் கலந்த எஞ்சின், அதிக மைலேஜ் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட மாடல் இது. விற்பனை நிறுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் இருந்த மோகத்தை கண்டு மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்.

இந்த பைக்கில், 13.14 பிஎச்பி பவரையும், 12.84 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 149சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. சரியான விலையில் கிடைக்கும் நம்பகமான பைக் மாடல். இதற்கு நேர் போட்டியாளரான பஜாஜ் பல்சர் 150 பைக்கும் சிறந்த சாய்ஸாக உள்ளது. இந்த பைக் குறித்து அதிகம் சொல்ல தேவையில்லை.

 ஐபோன்- X போனுக்கு இணையான விலையில் சிறந்த 10 பைக் மாடல்கள்!

சரி, பட்டியலை படித்து பார்த்துவிட்டீர்களா? அடுத்த சில மாதங்களில் அல்லது ஆண்டுகளில் உங்களது ஐபோனைவிட இந்த பைக்குகள் சிறந்த மறுவிற்பனை மதிப்பை தக்க வைத்திருக்கும். இனி ஐபோன்-10 வாங்குவதா அல்லது அதற்கு இணையான விலையில் கிடைக்கும் இந்த பைக்குகள் அல்லது ஸ்கூட்டர் ஒன்றை வாங்குவதா என்பது உங்கள் சாய்ஸ்.

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Friday, October 20, 2017, 17:00 [IST]
English summary
Top 10 bikes in India which are priced lower than the Apple iPhone X.
மேலும்... #டாப் 10 #top 10
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+