இந்தியாவில் ஜூன் மாத முடிவில் விற்பனை திறனை பெற்ற டாப்10 பைக்குகள்..! முழுத் தகவல்கள்..!!

Written By:

மோட்டார் சைக்கிள்களுக்கான உலகின் முதன்மையான சந்தைகளில் ஒன்று இந்தியா. இதனாலேயே ஆண்டு விற்பனை முடிவில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்து இயங்குகின்றன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

ஆண்டு முடிவுக்கு முன்னரே ஒரு மாத முடிவில் முடிவடையும் விற்பனையும் ஆட்டோமொபைல் வர்த்தக்கத்தில் முதன்மை பெறுகிறது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் பைக் விற்பனை திறன் குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

ஏப்ரல் 1ம் தேதி ஜிஎஸ்டி வரி வதிப்பு முறை இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. இதனுடைய தாக்கம் வாங்குபவர்கள் விற்பவர்களிடம் இருந்ததை இந்த கணக்கு முடிவுகள் நமக்கு உணர்த்துக்கின்றன.

Recommended Video - Watch Now!
Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

ஜூன் மாத கணக்கு முடிவில் விற்பனை திறன் பெற்ற பைக் மாடல்கள், கடந்த மே மாத விற்பனை அளவுடன் ஒப்பீடு செய்து இந்த கணக்கு விவரங்கள் வெளிவந்துள்ளன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

ஜூன் மாத பைக் விற்பனையில் இந்தியாவில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் முதலிடம் பிடிக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்.

ஜூனில் டா-10 விற்பனை பெற்ற பைக்குகளுக்கான பட்டியலில் ஹீரோவின் நான்கு தயாரிப்பு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

ஹீரோவின் ஸ்பிளண்டர் மாடல் பைக் தான் இந்தியாவில் கடந்த மாதத்தில் அதிக விற்பனையான பைக். மொத்தம் 2,19,103 ஹீரோ ஸ்பிளண்டர் பைக்குகள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

2016 ஜூன் மாதத்தோடு இந்த விற்பனை திறனை ஒப்பிட்டு பார்த்தால் ஸ்பிளண்டர் விற்பனை 2017ல் 7 சதவீத வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இதற்கு காரணம் ஜிஎஸ்டி நடைமுறை என்பது ஹீரோ விற்பனையாளர்களின் கருத்தாக உள்ளது.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

இரண்டாது இடத்தை ஹீரோவின் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக் பெற்றுள்ளது. ஜூனில் மொத்தம் 1,54,655 ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

கடந்த மே மாத விற்பனையோடு இந்த கணக்கு முடிவை ஒப்பிட்டால், ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக் ஜூனில் 9 சதவீத விற்பனை திறனை அதிகமாக பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் ஹீரோவின் கிளாமர் இந்தியாவில் 78,889 எண்ணிக்கையில் விற்பனையாகி ஜூனில் 17 சதவீத விற்பனை திறனை அதிகரித்துக்கொண்டுள்ளது.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

முதல் மூன்று இடங்களை மட்டுமில்லாமல், நான்காவது இடத்தையும் ஹீரோவின் தயாரிப்பு தான் பிடித்துள்ளது.

இந்தியாவில் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஷன் பைக், ஜூனில் 76,605 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

இந்தியாவில் பெரியளவில் ஹோண்டா பைக் பயன்படுத்துவது போன்று தோன்றினாலும், சிபி ஷைன் பைக் இந்த பட்டியலில் ஹோண்டாவின் தயாரிப்பு வரிசையில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த ஜூனில் இந்த பைக் 69,101 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் இடம்பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு தயாரிப்பின் கிளாசிக் மாடலாக உள்ளன இது கடந்த ஜூனில் 42,149 என்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

மேலும். இந்தியாவில் ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் கடந்த மே மாதம் விற்பனையோடு ஒப்பிடுகையில் ஜூனில் கிளாசிக் 350, 6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

இதற்கு பிறகு பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மாடல் பைக்குகள் கடந்த மாதத்தில் 37,503 என்ற எண்ணிக்கையில் விற்பனை அளவை பெற்றுள்ளன.

காலாண்டிற்கான கணக்கு முடிவிலும் அதே சமயத்தில் ஜூன் மாத கணக்கு முடிவிலும் பல்சர் மாடல் பைக்குகள் ஜிஎஸ்டி-யால் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

பஜாஜ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ்ன் அப்பாச்சி மாடல் பைக்குகள் இந்த பட்டியல் 9வது இடத்தை பிடித்துள்ளன.

மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி காரணமாக டிவிஎஸ் மோட்டார்ஸின் தயாரிப்புகள் 12 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜூனில் விற்பனையான டாப்10 பைக்குகள்..!!

10வது இடத்தை பஜாஜ் சிடி 100 பிடித்துள்ளது. இந்த பைக் ஜூன் மாத முடிவில் 24,776 எண்ணிக்கையில் விற்பனை திறனை பெற்றுள்ளன.

கடந்த மாதத்தோடு இதை ஒப்பீடு செய்கையில் சிடி 100 பைக், 36 சதவீத விற்பன்னை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: Top 10 Selling Bikes In India In June 2017, GST Seems To Have Had A Massive Effect. Click for the Details...
Story first published: Thursday, July 27, 2017, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark