ஜூனில் டாப்-10 விற்பனை திறனை பெற்ற ஸ்கூட்டர்கள்: முழுத் தகவல்கள்

Written By:

பஜாஜ் செடக் மாடலுக்கு பிறகு இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை தோய்வான நிலையிலே இருந்தது. இந்திய வாடிக்கையாளர்களும் ஸ்கூட்டர் வாங்குவதில் ஆர்வமின்றி இருந்தனர்.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

இதனால் ஸ்கூட்டர் என்பது பிரபலமான ஒரு வாகனமாகவும் திறன் படைத்த வாகனம் எனவும் இந்தியாவில் பார்க்கப்படவில்லை.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

ஆனால் சமீபத்திய காலங்களில் இந்தியா அதை மறந்தது. இன்று பல திறன் பெற்ற பைக்குகள் மற்றும் கார்களுக்கு இணையாக ஸ்கூட்டரின் விற்பனை போட்டி போட்டு கொண்டு நடக்கிறது.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

மோட்டார் சைக்கிள்களுக்கு இணையான திறன் மற்றும் தேவையுடன் ஸ்கூட்டர்களை பஜாஜ், சுசுகி, ஹோண்டா என வாகன துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

தற்போதைய ஸ்கூட்டர் மாடல்களில் ஆற்றல் மற்றும் திறனுடன், எரிவாயு கொள்ளவு மற்றும் தானியங்கி கியர் அமைப்பு போன்ற தொழில்நுட்பங்கள் தான் இந்த விற்பனை உயர்வுக்கு காரணம்.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் முதன்மை பெற்ற வாகன போக்குவரத்தாக வலம் வரும் ஸ்கூட்டரில் கடந்த ஜூன் மாத விற்பனையில் முதன்மை பெற்ற டாப் 10 மாடல்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

ஸ்கூட்டர் தேவைகளில் இந்தியாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது பல ஆண்டுகளாகவே ஹோண்டா ஆக்டிவா தான்.

கடந்த ஜூனில் மட்டும் சுமார் 234,767 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் ஜூபிட்டர் மாடல் உள்ளது.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

ஆக்டிவா விற்பனை உடன் இதை ஒப்பிடும் போது 2017 ஜூன் மாத முடிவில்எண்ணிக்கையில் சுமார் 174,197 என்ற அளவில் ஜூப்பிட்டர் குறைந்து விற்பனை ஆகியுள்ளது.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

ஜூன் மாத முடிவில் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடம் பெற்றிருப்பது ஹோண்டா தான்.

டிவிஎஸ், ஹீரோ, யமஹா, சுசுகி போன்றவை இந்த பட்டியலில் தங்களுடைய இடத்தை தக்கவைக்க போராடி வருகின்றன.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திற்காக ஹோண்டா டியோ உடன் ஹீரோ மாஸ்ட்ரோ மல்லுக்கட்டி நிற்கிறது.

இருந்தாலும், ஹீரோ மாஸ்ட்ரோ மாடல் சுமார் 38,511 எண்ணிக்கையில் விற்பனை ஆகி, கடந்த மாதத்தின் விற்பனை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 26,890 பெற்று பட்டியலில் நான்காவது நிலையை பெறுகிறது. சுசுகியின் அக்செஸ் 125 ஸ்கூட்டர் 26,511 என்ற எண்ணிக்கையில் விற்பனை ஆகி 5வது இடத்தை பெறுகிறது.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

110சிசி திறன் கொண்ட ஹீரோ டூயட் 20,341 எண்ணிக்கையில் விற்பனை ஆகி ஜூன் மாத முடிவில் 6வது இடத்தில் உள்ளது.

100சிசி ஹீரோ பிளஷர் மற்றும் ஃபேசினோ போன்ற ஸ்கூட்டர்கள் இதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

9வது இடத்தில் டிவிஎஸ் பெப் பிளஸ் மற்றும் 10 வது இடத்தில் யமஹா ரே ஸ்கூட்டர்கள் இடம்பெற்று ஜூன் மாத விற்பனை பட்டியலை நிறைவு செய்கின்றன.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

2017 ஜூன் மாத கணக்கு முடிவில் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை அளவில் நம்மை ஆச்சர்யப்படுத்துவது ஹீரோ மேஸ்ட்ரோ மாடல் தான்.

தற்போது நான்காவது நிலையில் இருந்தாலும் ஹீரோ மேஸ்ட்ரோ கடந்த ஆண்டை விட 2017 ஜூனில் 60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜூனில் டாப் 10 விற்பனை பெற்ற ஸ்கூட்டர்கள்

மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் இந்த பட்டியலில் 2வது இடத்தை பெற்றுள்ள டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடலை பின்னுக்கு தள்ளி, முன்னிலை பெறும் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

English summary
Top 10 Selling Scooters In India In June 2017 — Hero Maestro Pips Honda Dio. Click for the details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark