ஹீரோ நிறுவனத்தின் வயிற்றில் புளியை கரைக்கும் ஹோண்டா தயாரிப்புகளின் விற்பனை!

Written By:

மீண்டும் நம்பர்-1 என்ற கனவுடன் போட்டி போட்டு வரும் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கின் கனவை தவிடு பொடியாக்கி இருக்கிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். இதுவரை இல்லாத அளவு வித்தியாசத்துடன் ஸ்பிளென்டரை விற்பனையில் விஞ்சி கொடி கட்டி பறக்கிறது ஆக்டிவா.

போதாக்குறைக்கு, ஹோண்டா ஷைன் பைக்கும் ஹீரோ தயாரிப்புகளை விஞ்சி டாப் 10 பட்டியலில் ஒரு படி மேலே ஏறி அசத்தி இருக்கிறது ஹோண்டா ஷைன். இதன்மூலம், இந்தியாவின் நம்பர்-1 இருசக்கர வாகன தயாரிப்பாளர் என்ற இலக்கை நோக்கி ஹோண்டா முன்னேறி வருகிறது. டாப் 10 பட்டியலை பார்த்தால், ஹீரோ மற்றும் ஹோண்டா மாடல்களுக்கு இடையிலான போட்டா போட்டியை தெரிந்துகொள்ளலாம்.

 10. பஜாஜ் சிடி100

10. பஜாஜ் சிடி100

கடந்த மாதம் 10வது இடத்தில் பஜாஜ் சிடி100 பைக் மாடல் இடம்பிடித்தது. கடந்த மாதத்தில் 45,003 பஜாஜ் சிடி 100 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. அதிக மைலேஜ், பட்ஜெட் விலை போன்ற காரணங்களால் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறது பஜாஜ் சிடி100.

09. பஜாஜ் பல்சர்

09. பஜாஜ் பல்சர்

கடந்த மாதம் 9வது இடத்தை பஜாஜ் பல்சர் பைக் பெற்றது. கடந்த மாதத்தில் 50,219 பல்சர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது பல்சர். குறிப்பாக, பல்சர் 150 பைக் மாடல் வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான பிராண்டாக இருப்பது ஸ்திரமான விற்பனையை பெற்று வருகிறது. அதேநேரத்தில், விற்பனை தொடர்ந்து சராசரி அளவையே பதிவு செய்து வருவதும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு ஏமாற்றம் தரும் விஷயமாக இருக்கிறது.

08. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

08. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

கடந்த மாதம் 8வது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் 57,938 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகி உள்ளன. நம் நாட்டின் மிக குறைவான விலையில் கிடைக்கும் எளிய போக்குவரத்து சாதனம் என்பதே இதன் பலம்.

 07. டிவிஎஸ் ஜுபிடர்

07. டிவிஎஸ் ஜுபிடர்

டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் இரண்டு ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று டிவிஎஸ் ஜுபிடர். கடந்த மாதத்தில் 58,527 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன் சிறப்பாக இருப்பதுடன், ஆக்டிவாவுக்கு அடுத்து வாடிக்கையாளர்களின் விருப்பமான ஸ்கூட்டர் மாடலாக மாறி இருக்கிறது.

 06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

கடந்த மாதத்தில் 6வது இடத்தில் ஹீரோ கிளாமர் பைக் உள்ளது. கடந்த மாதத்தில் 62,713 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. 125சிசி செக்மென்ட்டில் வாடிக்கையாளர்களின் சிறப்பான தேர்வில் ஒன்றாக கிளாமர் விளங்குகிறது.

 05. ஹீரோ பேஷன்

05. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் ஹீரோ பேஷன் பைக் தடாலடியாக கீழே தள்ளப்பட்டது. ஹீரோ பேஷன் பைக்கின் ஆஸ்தான 4வது இடத்தை ஹோண்டா ஷைன் பைக் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளது. கடந்த மாதத்தில் 80,053 பேஷன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. மேலும், பேஷன் பைக்கின் விற்பனை தொடர்ந்து மந்தமாகவே இருந்து வருகிறது.

04. ஹோண்டா ஷைன்

04. ஹோண்டா ஷைன்

கடந்த மாதத்தில் 4வது இடத்திற்கு அதிரடியாக முன்னேறி ஹீரோ நிறுவனத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது ஹோண்டா ஷைன். கடந்த மாதத்தில் 1,00,824 பேஷன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. அழகான டிசைன், ஸ்மூத்தான எஞ்சின், சிறந்த இருக்கை அமைப்பு ஆகியவை இந்த பைக்கின் சிறப்புகள்.

 03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதத்தில் ஹீரோ டீலக்ஸ் பைக் தனது ஆஸ்தான 3வது இடத்தை தக்க வைத்தது. கடந்த மாதத்தில் 1,43,794 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. பட்ஜெட் விலையில் மிகவும் நம்பகமான பைக் மாடல் ஹீரோ டீலக்ஸ்.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 பைக் மாடலாக வலம் வந்த ஹீரோ ஸ்பிளென்டர் தற்போது ஹோண்டா ஆக்டிவா கொடுத்த நெருக்கடியால் இரண்டாம் இடத்திற்கு இறக்கப்பட்டுவிட்டது. மேலும், சிறிய வித்தியாசத்தில் இருந்த விற்பனை இப்போது மிக அதிகமாகிவிட்டதுதான் மீண்டும் நம்பர்-1 இடத்திற்கு முன்னேறலாம் என்ற ஸ்பிளென்டரின் கனவை தகர்த்துள்ளது. கடந்த மாதத்தில் 2,26,681 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இது சிறப்பான எண்ணிக்கை என்றாலும் ஆக்டிவாவுடன் ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் துண்டு விழுந்துவிட்டது.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

யாருமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது ஹோண்டா ஆக்டிவா. கடந்த மாதத்தில் 3,12,632 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், எஞ்சின், செயல்திறன், மைலேஜ் என அனைத்திலும் சிறந்த தேர்வாக ஹோண்டா ஆக்டிவா விளங்குவதே இந்தளவு வரவேற்பை பெற்றதற்கான காரணம். மறுவிற்பனை மதிப்பிலும் சிறந்த மாடல்.

 ஹீரோ தயாரிப்புகளை ரவுண்டு கட்டி அடிக்கும் ஹோண்டா மாடல்கள்!

ஒருபுறம் முன்னணி மாடல்கள் ஹோண்டா தயாரிப்புகளிடம் வீழ்ந்து வருகிறது. மறுபுறத்தில் போனியாகாததால் பல மாடல்களின் விற்பனையை ஹீரோ நிறுத்தியுள்ளது. இந்த நெருக்கடியை போக்கிக் கொண்டு நம் நாட்டின் நம்பர்-1 இருசக்கர வாகன தயாரிப்பாளர் என்ற பெருமையை தக்க வைக்க, பல புதிய மாடல்களை களமிறக்க வேண்டிய கட்டாயமும், புதிய விற்பனை கொள்கைகளை வகுக்க வேண்டிய கட்டாயமும் ஹீரோ நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

English summary
Top 10 selling Two wheelers in May 2017.
Story first published: Wednesday, May 31, 2017, 11:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark