ஓட்ட ஓட்ட உற்சாகம் தரும் இந்தியாவின் 5 சிறந்த பைக் மாடல்கள்!

Written By:

நாம் எந்த பைக்கை வைத்து ஓட்டி வந்தாலும், எத்தனை ஓட்டியிருந்தாலும், சில பைக்குகள் நம் மனதை ஏங்க வைக்கும்; வாங்கி ஓட்டியே தீர வேண்டும் என்ற ஆசைப்பட வைக்கும். அவ்வாறு, பெரும்பாலானோரை ஆசைப்பட வைக்கும் அந்த டாப் -5 பைக் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் ட்யூக் 390

கேடிஎம் ட்யூக் 390

ஒவ்வொரு இளைஞருக்குள்ளும் ஆசைத் தீயை எண்ணெய் ஊற்றாமல் வளர்க்கும் வசீகர தோற்றம் கொண்ட பைக் மாடல். இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாகவும் வலம் வருகிறது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல். பிரத்யேக வண்ணக் கலவையிலான அடையாளம், அட்டகாசமான டிசைன், சிறந்த தொழில்நுட்ப வசதிகள், சரியான விலை போன்றவை இந்த பைக்கின் கூடுதல் சிறப்பம்சங்கள்.

எல்இடி ஹெட்லைட், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. புளூடூத் மூலமாக மொபைல்போனை இணைத்து, அழைப்பு விபரங்களை இந்த திரையில் காணலாம். இந்த பைக்கில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய 373.3சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஓட்ட ஓட்ட உற்சாகம்... ஆசைப்பட வைக்கும் அந்த டாப் - 5 பைக்குகள்!

இந்த பைக்கில் ரைடு பை வயர் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் பாஷ் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன. ரூ.2.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350

மோட்டார்சைக்கிள் பிரியர்களின் முதல் சாய்ஸ். ஆஜானுபாகுவான தோற்றம், அதற்கு இணையான அலாதியான சைலென்சர் சப்தம் ஆகியவை இந்த மோட்டார்சைக்கிளுக்கான மதிப்பையும், மார்க்கெட்டையும் நித்தம் உயர்த்தி வருகிறது.

தினசரி பயன்பாடாகட்டும், நீண்ட தூர பயணங்களாகட்டும், ஓர் உன்னதமான பயண அனுபவத்தை வழங்கும் அத்துனை விஷயங்களும் இந்த மோட்டார்சைக்கிளில் உண்டு. இன்னும் எத்தனை தலைமுறைகளானாலும், இந்த மோட்டார்சைக்கிளின் டிசைன் தலைமுறைகளை விஞ்சி நிற்கிறது, நிற்கும்!

ஓட்ட ஓட்ட உற்சாகம்... ஆசைப்பட வைக்கும் அந்த டாப் - 5 பைக்குகள்!

இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய 346சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.43 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. எனது அடுத்த பைக் இதுதான் என்று ஆசைப்பட வைக்கும் மாடல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 யமஹா எஃப்இசட்25

யமஹா எஃப்இசட்25

பட்ஜெட் ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் ஆர்15 மூலமாக இளைஞர்களை சுண்டி இழுத்த யமஹா நிறுவனத்திடம் அதற்கு அடுத்த ரகத்தில் பைக் மாடல் இல்லாதது பெரும் குறையாக இருந்தது. மிக நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இந்தியர்களிடம் இருந்த இந்த குறையை போக்கும் விதத்தில், யமஹா களமிறக்கிய மாடல்தான் எஃப்இசட்25.

ஓட்ட ஓட்ட உற்சாகம்... ஆசைப்பட வைக்கும் அந்த டாப் - 5 பைக்குகள்!

நேக்கட் பாடி ஸ்டைலில் மிக நேர்த்தியான டிசைனுடன், அதிக செயல்திறன் மிக்க இந்த பைக் மாடல் இளைஞர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. இந்த பைக்கில் 20 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வழங்கக்கூடிய 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக் இல்லாதது ஏமாற்றம் தரும் விஷயம். இந்த பைக் ரூ.1.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

கேடிஎம் ஆர்சி 390

கேடிஎம் ஆர்சி 390

ஓட்ட ஓட்ட உற்சாகம் தரும் பைக் மாடல்களில் ஒன்று கேடிஎம் ஆர்சி390. கவர்ச்சிகரமான வடிவமைப்பு, எளிதான கையாளுமை, அருமையான செயல்திறன் கலந்து செய்த கலவையாக இருக்கிறது. கேடிஎம் ட்யூக் 390 பைக்கை போன்றே ஸ்லிப்பர் க்ளட்ச், ரைடு பை ஒயர் நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளன.

ஓட்ட ஓட்ட உற்சாகம்... ஆசைப்பட வைக்கும் அந்த டாப் - 5 பைக்குகள்!

இந்த பைக்கில் இருக்கும் 373.3சிசி எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரூ.2.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200

பஜாஜ் பல்சர் என்எஸ்200

ஒரு லட்ச ரூபாய் மார்க்கெட்டில் ஓர் சிறந்த மாடல் பஜாஜ் பல்சர் என்எஸ்200 மாடல். மிகச் சிறப்பான தோற்றத்தில் கவர்கிறது. பட்ஜெட் பைக்குகளை ஓட்டி வருபவர்கள், அடுத்து வாங்க நினைக்கும் பைக் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

ஓட்ட ஓட்ட உற்சாகம்... ஆசைப்பட வைக்கும் அந்த டாப் - 5 பைக்குகள்!

கேடிஎம் ட்யூக் 200 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் இடம்பெற்று இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 199சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 23.5 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எம்ஆர்எஃப் ஸாப்பர் டயர்கள் ஆகியவை இதன் மதிப்பை கூட்டும் விஷயங்கள். ரூ.1.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஓட்ட ஓட்ட உற்சாகம்... ஆசைப்பட வைக்கும் அந்த டாப் - 5 பைக்குகள்!

இந்த பட்டியலில் அல்லாத உங்கள் மனங்கவர்ந்த விருப்பமான பைக் மாடல் குறித்த விபரங்களை கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

English summary
Here is our earnest attempt to list the top 5 most desirable bikes in India.
Story first published: Friday, December 1, 2017, 13:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark