தீபாவளிக்கு வாங்க இந்த டாப்-5 மாடல்களில் உங்கள் டூ-வீலர் சாய்ஸ் என்ன..??

Written By:

தீபாவளியை முன்னிட்டு டூ-வீலர் ஷாப்பிங் செய்ய காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்த பண்டிகை காலத்திற்கு ஏற்றவாறு இந்திய சந்தையில் கலக்கி வரும் இருசக்கர மாடல்களை குறித்து பார்க்கலாம்.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

பண்டிகை என்றாலே பலதுறை சார்ந்த வியாபாரங்கள் களைக்கட்டும். வாகனங்கள் போல அதிக மதிப்புடைய பொருட்களும் இந்த சீசனில் தான் நல்ல விற்பனை திறனை எட்டும்.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

இதை பயன்படுத்தி பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது தயாரிப்பிற்கான சலுகைகளை பற்றி விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

அதற்கு முன்னதாக இந்திய வாடிக்கையாளர்கள் பலர், இந்த பண்டிகை காலத்தில் புதிய வாகனங்களை வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

இது வரக்கூடிய நாட்களில் வாகனங்களுக்கான விற்பனை திறனை மேலும் அதிகரிக்கும் என்று வணிகத்தை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

இந்த பண்டிகை காலத்தில் கார்கள் மட்டுமில்லாமல், புதிய ரக பைக், ஸ்கூட்டர்களும் வாடிக்கையாளர்களின் விருப்ப தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

அந்த வகையில் இந்த சீசனில் இந்திய சந்தையை கலக்கி வரும் டாப் 5 ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா 4ஜி

ஹோண்டா ஆக்டிவா 4ஜி

இந்தியாவில் அதிக விற்பனை திறனை கொண்ட ஆக்டிவா மாடல் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரை 2017ன் தொடக்கத்தில் ஹோண்டா வெளியிட்டது.

பிஎஸ் 4 எஞ்சின், பகலில் எரியும் முகப்பு விளக்குகள், மேட் ஏக்சிஸ் கிரே நிறத்தேர்வு என பல்வேறு அம்சங்கள் ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரில் உள்ளது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

109 சிசி திறன் சிங்கிள் சிலிண்டர் கொண்ட அக்டிவா 4ஜி ஸ்கூட்டரின் எஞ்சின், லிக்குவிடு ஏர்கூல்டு முறையில் செயலாற்றும். இதன் மூலம் 8பிஎச்பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

ஒருங்கிணைந்த பிரேக் அமைப்பு, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், இருக்கைக்கு கீழான ஸ்டோரேஜ் வசதி போன்ற கூடுதல் அம்சங்களை கொண்டுள்ள ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் டெல்லி எக்ஸ்-ஷோரூமின் படி ரூ.50,846/- விலை பெறுகிறது.

டிவிஎஸ் ஜூப்பிட்டர்

டிவிஎஸ் ஜூப்பிட்டர்

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் தேர்வுகளில் இந்தியளவில் விற்பனையில் கலக்கி வரும் மாடல் டிவிஎஸ் ஜூப்பிட்டர்.

இந்திய சந்தைகளில் இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவாவிற்கான சிறந்த போட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

110 சிசி திறன் கொண்ட ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் 7.9 பிஎச்பி பவர் மற்றும் 8 என்.எம் டார்க் திறன் வழங்கும். 12-இஞ்ச் அலாய் வீல், கூடுதல் எரிவாயு நிரம்பிக் கொள்ளும் திறன்,

கைப்பேசி சார்ஜர் மற்றும் டெலஸ்கோபிக் சன்பென்ஷன் உட்பட பல அம்சங்கள் டிவிஎஸின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரில் இருக்கின்றன.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜூப்பிட்டர் ஸ்கூட்டரில் புதிய கிளாசிக் எடிசன் என்ற மாடலை வெளியிட்டு இருந்தது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்புப்படி ரூ.55,266 விலையில் வெளியான ஜூப்பிட்டர் கிளாசிக் எடிசன், ஆட்டோமேட்டிக் பிரிவில் சிறந்த மேம்படுத்தப்பட்ட வடிவமாக பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் விக்டர்

டிவிஎஸ் விக்டர்

டிவிஎஸ் தயாரிப்பில் இந்தியாவில் ஜூப்பிட்டருக்கு பிறகு அதிக விற்பனை திறனை பெற்ற மாடல் என்றால் அது விக்டர் மோட்டர் சைக்கிள் தான். இதன் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட வடிவமாக ப்ரீமியம் எடிசனை வெளியிட்டது டிவிஎஸ்.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

110சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த பைக்கின் எஞ்சின் லிக்குவிடு கூல்டு தொழில்நுட்பத்தில் இயங்கும்.

9 பிஎச்பி பவர் மற்றும் 9.4 என்.எம் டார்க் திறனை வழங்கும் டிவிஎஸ் விக்டர் பைக், ப்ரீமியம் எடிசனில் வெளியான போது பல்வேறு தோற்ற பொலிவுகளை புதியதாக பெற்றது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

டிவிஎஸ் விக்டர் பைக்கில் பல ஆண்டுகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட வடிவமாக வெளியான ப்ரீமியம் எடிசன் மாடல் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 55,065/- விலை பெறுகிறது.

யமஹா ஃபேஸர் 25

யமஹா ஃபேஸர் 25

எஃப்.இசட் 25 நேக்கிடு 250சிசி பைக்கை தழுவி யமஹா நிறுவனம் தயாரித்த, ஃபேஸர் 25 பைக் சிறந்த வடிவமைக்கப்பட்ட என்ற பெயரை இந்திய ஆட்டோமொபைல் துறையில் பதிவு செய்துள்ளது.

250சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக், அதிகப்பட்சமாக 20 பிஎச்பி பவர் மற்றும் 20 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

154 கிலோ எடை பெற்ற இந்த பைக்கில் விண்டு பிரொடெக்‌ஷன் உட்பட ரைடருக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.1,29,335 விலை கொண்ட யமஹா ஃபேஸர் 25 பைக், நீண்ட தூர சுற்றுலா பயணங்களுக்கு ஏற்ற மாடல்.

டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர்

டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர்

இந்தியாவில் இயங்கும் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் மாடல் பைக்கை சமீபத்தில் வெளியிட்டது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

ஸ்டீரிட் ட்வின் மற்றும் டிரையம்ப் போனவில்லே டி100 ஆகிய பைக் மாடல்களில் உள்ள அம்சங்களை பின்பற்றி ஸ்டீரிட் ஸ்கிராம்பளர் பைக்கை டிரையம்ப் நிறுவனம் தயாரித்துள்ளது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

900சிசி பேரலல் ட்வின் எஞ்சினை பெற்றுள்ள இந்த மாடல் பைக், 54 பிஎச்பி பவர் மற்றும் 79 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

டூயல் டயர்கள், பேஷ் பிளேட் மற்றும் தொலை தூர பயணத்திற்கான சன்பென்ஷன் போன்ற முக்கிய அம்சங்களை பெற்றுள்ள இந்த பைக் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 8.1 லட்சம் விலை பெறுகிறது.

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாற்றான டாப்-5 டூ-வீலர் சாய்ஸ்..!!

பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாறான தேவைகள் கொண்ட இந்த 5 மாடல் பைக்குகள் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் தோற்றங்களில் சிறந்த தேவை முறைகளை கொண்டவை.

மேலும், விடுமுறை நாட்களை களிக்க நீங்கள் செய்யும் டூரிங் பிளான்களுக்கும் மேற்கூறிய இந்த 5 மாடல் பைக்குகள் ஏற்புடையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil: Top Two Wheelers to buy for this Diwali Season. Click for Details...
Story first published: Tuesday, September 12, 2017, 13:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark