டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

Written By:

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக டிவிஎஸ் அகுலா பைக் தீவிரமான சாலை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் சோதனை ஓட்டம் நடத்தப்படும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இந்த புதிய பைக் மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது டிவிஎஸ் மோட்டார்ஸ்.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

இளைஞர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய பைக் மாடல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அகுலா 310 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய பைக் மாடலை அப்பாச்சி 300 என்ற பெயரில் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

புதிய டிவிஎஸ் அகுலா பைக் வரும் ஏப்ரல் - ஜூலை இடையிலான காலக் கட்டத்தில் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, அந்நாட்டின் otomotifnet.com என்ற இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, இந்தோனேஷியாவிற்கு முன்பாகவே இந்தியாவில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முழுவதும் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பைக் மாடலாக வருகிறது டிவிஎஸ் அகுலா. இந்த பைக்கில் ஃபைபர் கிளாஸ் அல்லது ஏபிஎஸ் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட ஃபேரிங் பேனல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

டிவிஎஸ் அகுலா 310 பைக்கில் டியூவல் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பைலட் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் அகுலா கான்செப்ட் பைக் மாடலைவிட ஒரு சில மாற்றங்கள் தயாரிப்பு நிலை மாடலில் நிகழ்ந்துள்ளது.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

வால் பகுதியில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது. தயாரிப்பு நிலை மாடலில் சைலென்சரும் புதிதாக இருக்கும். எல்இடி டெயில் லைட் மற்றும் சாரி கார்டு உள்ளிட்டவையும் கூடுதலாக இருக்கிறது.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும், அதே 313சிசி சிங்கிள் சிலிண்டர் வாட்டர் கூல்டு எஞ்சின்தான் டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

எஞ்சின் தவிர்த்து, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் சிஸ்டம் ஆகியவையும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் இருந்துதான் எடுத்து இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்று இருக்கும். இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்களும், மிச்செலின் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கும்.

டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக் வருகை மற்றும் விபரம்!

ரூ.1.8 லட்சம் முதல் ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ஆர்சி390 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 பைக்குகளும் இந்த புதிய டிவிஎஸ் அகுலா 310 பைக் போட்டி போடும்.

புதிய டொயோட்டா இன்னோவா காரின் பிரத்யேக படங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெஸ்ட்  டிரைவ் செய்தபோது எடுத்த படங்களை கீழே உள்ள கேலரியில் சென்று காணலாம்.

English summary
According to reports, TVS is all set to launch the fully-faired sports motorcycle, the Akula 310 in the Indian market by April 2017.
Story first published: Tuesday, January 17, 2017, 10:13 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos