ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்!

Written By:

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக் விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்!

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான அப்பாச்சி பிராண்டில் சக்திவாய்ந்த மாடலாக அப்பாச்சி 200 4வி மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கார்புரேட்டர் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இனி எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கும்.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்!

டிவிஎஸ் அப்பாச்சி 200 எஃப்ஐ4வி என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் நுட்பத்தில் இயங்கும் 197.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.71 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். புதிய எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்!

இந்த புதிய மாடல் 0- 60 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 129 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்!

புதிய அப்பாச்சி 200 எஃப்ஐ4வி பைக்கில் ட்வின் ஸ்பிரே- ட்வின் போர்ட் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த செயல்திறன் மற்றும் உடனடி பிக்கப் கிடைக்கும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 எஃப்ஐ4வி பைக்கில் ராயல் க்ரவுன் ப்ளை ஸ்க்ரீன் என்ற புதிய வைசர் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிதய மாடல் பியர்ல் ஒயிட் மற்றும் மேட் யெல்லோ ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக்!

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 எஃப்ஐ4வி பைக் மாடல் ரூ.1.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அப்பாச்சியின் மதிப்பை உயர்த்தும் தொழில்நுட்பமாக இதனை கருத முடியும்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache 200 Fi4V launched in India. The all-new TVS Apache Fi4V is priced at Rs 1,07,005 (ex-showroom).
Story first published: Monday, November 6, 2017, 17:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark