அப்பாச்சி மாடல் பைக்குகளில் புதிய பதிப்பை வெளியிட்ட டிவிஎஸ்..!!
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 & 180 மாடல் பைக்குகளில் ரூ.77,865 தொடக்க விலையில் புதிய பதிப்பு வெளியானது..!!
டிவிஎஸ் நிறுவனம் புதிய மேட் ரெட் வேரியண்ட் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 மற்றும் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180 மாடல் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது.

மேட் ரெட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் ரூ.77,865 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஆர்.டி (ரியர் டிஸ்க்) ரூ.80,194 மதிப்பில் வெளிவந்துள்ளது.

மேலும் அப்பாச்சி ஆர்டிஆர் 180 மாடல் பைக் ரூ.81,833 விலை பெறுகிறது. அனைத்து பைக்குகளின் விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் 180 பைக்குகளில் வெளிவந்துள்ள இந்த வேரியண்டுகள் அனைத்தும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் இருக்கும் மேட் ரெட் நிறத்தை பெற்றுள்ளன.

மேலும் இந்த புதிய மாடல்களில் ரிம் ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஆர்டிஆர் 160 பைக்கில் சிவப்பு நிறத்திலும், ஆர்டிஆர் 180 பைக்கில் வெள்ளை நிறத்திலும் உள்ளன.

இதுபோன்ற சில அழகியல் சார்ந்த மாற்றங்கள் தான் செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பில் எந்தவிதமான மாறுபாடுகளும் பைக்கில் மேற்கொள்ளப்படவில்லை.

அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் இடம்பெற்றுள்ள ஏபிஎஸ் வேரியண்டில் புதிய நிற மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் உள்ள 159.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 15.2 பிஎச்பி பவர் மற்றும் 13.1 என்.எம் டார்க் திறன் வழங்கும்.

மேலும் அப்பாச்சி ஆர்டிஆர் 180 மாடலில் உள்ள 177.4 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் 17.03 பிஎச்பி பவர் மற்றும் 15.5 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.
டிவிஎஸின் பெருமைமிகு தயாரிப்பான அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 180 மாடல்கள் இரண்டிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அப்-ஃபிரெண்டு டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் ட்வின் இன்வெர்டட் வாயு நிரம்பப்பட்ட எம்ஐஜி ஷாக் அப்ஸ்பர்கள் பைக்கின் சக்கரங்களில் உள்ளன.

பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 270மிமீ பெடல் டிஸ்க் பிரேக் உள்ளது. அதேபோல பின்பக்க சக்கரங்களில் 200மிமீ பெடல் டிஸ்க் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆர்டிஆர் 160 மாடலில் பின்பக்க சக்கரத்தில் 130மிமீ பிரேக் அமைப்பு உள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் 180 மாடல் பைக்குகளில் இந்த புதிய மேட் ரெட் எடிசனை வெளியிட்டுள்ளது.

மேலும் டிவிஎஸ் தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் முற்றிலும் செயல்திறன் கொண்ட அப்பாச்சி ஆர்.ஆர் 310எஸ் பைக் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








