ஸ்கூட்டர்கள் விற்பனையில் இந்தியாவில் 2ஆம் இடம் பெற்றது டிவிஎஸ்!

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் டிவிஎஸ் நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக முன்னர் விளங்கிய டிவிஎஸ் நிறுவனம், மீண்டும் இழந்த இடத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோ நிறுவனத்தை முந்தி இரண்டாமிடம் பெற்றுள்ளது டிவிஎஸ்.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. அந்த வகையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருந்த ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனமும் தப்பவில்லை.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், 2,35,465 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்த ஹீரோ நிறுவனம், தற்போதைய ஆண்டில் 1,21,144 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்றுள்ளது. கிட்டத்தட்ட பாதிக்கு பாதியாக விற்பனை சரிந்துள்ளது.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

டிவிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,94,056 என்ற எண்ணிக்கையிலிருந்து இந்த ஆண்டில் 1,88,609 என சிறிய எண்ணிக்கையிலான விற்பனை தான் சரிந்துள்ளது.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இதற்கு காரணமாக கூறப்பட்டாலும், ஹீரோ நிறுவனம் 49% சரிவை சந்தித்துள்ள நேரத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை 3% அளவிற்கே சரிந்துள்ளது.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

ஒட்டுமொத்த அளவில் கணக்கில் கொண்டால் கடந்த 10 மாதங்களில் டிவிஎஸ் நிறுவனம் 6,77,172 பைக்குகளையும், ஹீரோ நிறுவனம் 6,58,255 பைக்குகளையும் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் இரண்டாவது இடத்தை ஹீரோ நிறுவனத்திடமிருந்து தட்டிப்பறித்துள்ளது டிவிஎஸ்.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு (ஸ்கூட்டர்) துணைத்தலைவர் அனிருதா ஹல்தர் கூறும்போது, "பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அனைத்து நிறுவனங்களுமே சரிவை சந்தித்துள்ளன ஆனாலும் டிவிஎஸ் நிறுவனம் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டது" என்றார்.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற இரண்டுக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் அளித்து ஸ்கூட்டர்கள் கையிருப்பு பேணிக்காக்கப்படுகிறது எனவும் "30 நாட்கள் ஸ்டாக்" என்ற திட்டப்படி 30 நாட்களுக்கு விற்பனைக்கு தேவையான பைக்குகளை கையிருப்பில் வைத்துள்ளோம் எனவும் ஹல்தார் கூறினார்.

ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை முந்திய டிவிஎஸ்!

டிவிஎஸ் நிறுவனம் வீகோ, ஸ்கூட்டி பெப், ஜூபிடர் மற்றும் ஸெஸ்ட் மாடல் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவருகிறது. அதே வேளையில் ஹீரோ நிறுவனம் டூயட், மேஸ்ட்ரோ எட்ச் மற்றும் ப்ளெசர் மாடல் ஸ்கூட்டர்களை சந்தைபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ரேஸ் பைக்கின் படங்கள்:

More from DriveSpark

Article Published On: Thursday, February 23, 2017, 15:46 [IST]
English summary
Hero MotoCorp's sales nearly halved, while TVS Motor volumes sustained even after the ban on high-value currencies in India and overtook Hero to become the second largest scooter manufacturer in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+