ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் விரைவில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள்..?

Written By:

ஹைபிரிட் இருசக்கர வாகனங்களுக்கான 'உந்துதல் சக்தி' அமைப்பிற்கான காப்புரிமையை தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

ஹைபிரிட் இருசக்கர வாகனங்களுக்கான ‘உந்துதல் சக்தி' அமைப்பிற்கான காப்புரிமையை தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

ஒருபுறம் டீசல், பெட்ரோல் தேவை அதிகரித்து வந்தாலும், இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மட்டுமே இவற்றை இயற்கையாக பெற முடியும் என்று கூறப்படுகிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

மறுபுறம் பெட்ரோல், டீசல் கொண்டு இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்துவதோடு பொது மக்களுக்கும் சுவாசக்கோளாரையும் ஏற்படுத்துகிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பெட்ரோல், டீசலுக்கும் மாற்றாக தற்போது வளர்ந்து வருவது ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் தொழில்நுட்பம் ஆகும்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

முன்னணி நிறுவனங்கள் பலவும் மாறி வரும் ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு தங்களை மாற்றி வருகின்றன.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரானிக் வாகனங்களின் மூலம் நமக்கும், சுற்றுச்சூழலுக்கும் அதிக நன்மைகள் கிடைக்கிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

இருந்தாலும், இவற்றில் உள்ள ஒரே குறைபாடாக இருப்பது அவற்றின் விலை மட்டுமே.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

இந்த வகை வாகனங்கள் மின் ஆற்றலை பேட்டரிகளில் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் செயல்படுவதால் அவற்றிற்கான விலை சற்று கூடுதலாகவே உள்ளது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு அதிக நன்மைகள் தருவதை கருத்தில் கொண்டு இந்த வகை வாகனங்களை வாங்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் சலுகைகள் அளித்து வருகின்றன.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

இந்நிலையில், அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான இந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பணியில் டிவிஎஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இதற்கான வேலைகளை 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

2012ஆம் ஆண்டில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹைபிரிட் கான்செப்ட் ஸ்கூட்டரான ‘க்யூப்'-ஐ அந்நிறுவனம் காட்சியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

கார்களில் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் புகுத்துவது சற்று சிரமமானது என்று கூறப்படுகிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

தற்போது இருசக்கர வாகனங்களானது இண்டர்னல் கம்பஸ்ஷன் இஞ்சின் கொண்டு இயங்குகிறது. இது புகை மாசை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

ஹைபிரிட் இருசக்கர வாகனத்தில் இண்டர்னல் கம்பஸ்ஷன் இஞ்சினுடன், எலக்ட்ரிக் மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

இண்டர்னல் கம்பஸ்ஷன் இஞ்சின் பிரதான உந்து சக்தியை இருசக்கர வாகனத்திற்கு அளிக்கும் நிலையில், எலக்ட்ரிக் மோட்டார் அதற்கு துணைபுரியும்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

கியர்கள் மூலம் இணைப்பு பெற்றிருக்கும் இஞ்சின் எலக்ட்ரிக் மோட்டார் இயங்கும் போது வீணாக இயங்குவதால், ஆற்றல் இழப்பு ஏற்படும், இதுவே ஹைபிரிட் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தும் போது ஏற்படும் சவால் ஆகும்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

இந்த சவாலை டிவிஎஸ் நிறுவனம் வெற்றிகரமாக கடந்து விட்டதாக தெரிகிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

ஹைபிரிட் இருசக்கர வாகனங்களுக்கான உந்துதல் சக்தி அமைப்பிற்கான காப்புரிமையை தற்போது டிவிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

உந்துதல் சக்தி அமைப்பிற்கான காப்புரிமைக்காக சென்னை காப்புரிமை அலுவலகத்தில் டிவிஎஸ் நிறுவனம் 2008ஆம் ஆண்டில் விண்ணப்பம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு மாறப்போகும் தமிழகத்தின் டிவிஎஸ்.!

இதற்கான காப்புரிமையை பெற்றுவிட்டதால் மக்களில் நம்பகத்தன்மையை பெற்ற டிவிஎஸ் நிறுவனம் , விரைவில் ஹைபிரிட் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil about TVS gets patent for power propulsion system for hybrid two wheelers.
Story first published: Saturday, May 6, 2017, 15:48 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos