விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவில் இந்த நிறுவனம் தான் நம்பர்-1...!

Written By:

இந்தியாவில் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்ற இருசக்கர தயாரிப்பு நிறுவனம் எது என்பது குறித்த எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

இந்தியர்கள் எந்த ஒரு பொருளையும், வாங்குவதில் காட்டும் அக்கறையை விட அதன் விற்பனைக்கு பிந்தைய சேவை எப்படி உள்ளது என்பதற்கு தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

விற்பனைக்கு பிந்தைய சேவை எவ்வாறு அமைகிறதோ அதைப் பொருத்தே அந்த பிராண்டின் மீது நம்பகத்தன்மை ஏற்படுகிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

ஆட்டோமொபைல் துறையிலும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

ஜேடி பவர் என்ற நிறுவனத்தார் இது தொடர்பாக நாடு முழுவதும் ஒரு சர்வேவை நடத்தியுள்ளனர். இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

இதன்படி இந்தியாவில் இருசக்கர வாகன வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று நம்பர்-1 பிராண்டாக டிவிஎஸ் நிறுவனம் விளங்குகிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

வாடிக்கையாளர்களின் திருப்தியை பெற்ற டிவிஎஸ் நிறுவனம் 782 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

இது தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் என்பது பெருமைகொள்ளத்தக்க ஒன்றாகும். இந்தியாவின் 3வது பெரிய இருசக்கர வாகன நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் 746 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

இதே போல 746 மதிப்பெண்களுடன் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் மூன்றாமிடமும், 735 மதிப்பெண்கள் பெற்று மற்றொரு தமிழக நிறுவனமான ராயல் என்ஃபீல்டு 4ஆம் இடமும் பெற்றுள்ளன.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

சர்வீஸ்க்கு வாகனங்களை எடுத்துச் செல்லும் போது சர்வீஸ் நிலையத்தார் வாடிக்கையாளர்களுடன் உரையாடுகையில் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதாக இந்த ஆய்வு மூலம் தெரியவருகிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

இந்த ஆய்வு 1 முதல் 2 வருட பைக் உரிமையாளர்களிடத்தில் எடுக்கப்பட்டதாகும்.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

மேலும் வாடிக்கையாளர் திருப்தி 5 முக்கிய அம்சங்கள் மூலம் கணக்கிடப்பட்டது.

அந்த 5 அம்சங்கள் கீழ்கண்டவாறு..

அந்த 5 அம்சங்கள் கீழ்கண்டவாறு..

  • சர்வீசுக்காக வாகனங்களை பிக்-அப் செய்யும் வசதி
  • சர்வீஸ் குறித்து அறிவுரை வழங்குதல்,
  • சர்வீஸின் தரம்
  • சர்வீஸ் செய்யும் வசதி
  • சர்வீஸ் குறித்து வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்துதல்
விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

வாடிக்கையாளர் நன்மதிப்பு என்பது 1000 பாயிண்டுகள் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்நிறுவனம் தான் நம்பர்-1..!

கார்களில் மாருதி நிறுவனம் போல் இருசக்கர வாகனங்களில் இந்தியர்களின் நன்மதிப்பை பெற்ற பிராண்டாக டிவிஎஸ் நீடிக்கிறது.

English summary
Read in tamil about tvs tops customer satisfaction among two wheeler manufacturers in india
Story first published: Saturday, April 29, 2017, 7:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark