டிவிஎஸ், ஹீரோ நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.70000 விலையில் 2018ல் களமிறங்கும் புதிய மின்சார ஸ்கூட்டர்

Written By:

ஸ்டார்ட் அப் நிறுவனமான ட்வென்டி டூ மோட்டார்ஸ் 'ஃபிளோ' என்ற பெயரில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

ஒற்றை சிங்கிள் சார்ஜில் சுமார் 80 கி.மீ தொலைவு வரை செல்லும் திறனோடு பயணிக்கும் வகையில் ஃபிளோ ஸ்கூட்டர் தயாராகவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

அசத்தலான தோற்றத்தில் வசீகரிக்கும் இந்த ஸ்கூட்டர் 2018ல் நடைபெறயிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவின் போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

உற்பத்தி செய்யப்படும் மாடலுக்கு இணையாக இந்த கான்செப்ட் மாடல் காட்சியளிக்கிறது. வட்ட வடிவிலான எல்.இ.டி ரிங் பெற்ற ஹெட்லைட், கோண வடிவிலான கூர்மையான விளிம்பில் அப்ரான் பெற்றுள்ளது.

Recommended Video
[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

ஸ்டைலான அம்சங்களை கொண்ட டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக் அமைப்பு ஆகியவற்றை சாதரண மாடலில் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

மேலும் ட்வென்டி டூ மோட்டார்ஸஸின் ஃபிளோ ஸ்கூட்டரின் டாப் வேரியன்டில் இரட்டை பேட்டரி கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

2100 வாட்ஸ் திறன் பெற்ற மின்சார மோட்டார் இந்த ஸ்கூட்டரின் இடம்பெறுகிறது. இதன் மூலம் 90 என்.எம் டார்க் திறன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

2 மணிநேரம் அளவில் சார்ஜ் ஆகும் இந்த ஸ்கூட்டரின் எடை தாங்கும் திறன் 150 கிலோ. மணிக்கு ஃபிளோ ஸ்கூட்டர் சுமார் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவின் போது சுமார் 22 ஃபிளோ மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்காக ட்வென்டி டூ மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் மும்முரமாக உள்ளன. அதேசமயத்தில் புதியவரவாக ட்வென்டி டூ மோட்டார்ஸ் நிறுவனமும் களமிறங்குவது மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் மேலும் போட்டியை அதிகரிக்கும்.

ரூ.70,000 விலையில் 2018ல் களமிறங்கும் மின்சார ஸ்கூட்டர்..!!

அறிவிப்பின் வாயிலாகவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்வென்டி டூ மோட்டார்ஸின் ஃபிளோ ஸ்கூட்டர், ரூ.65,000 முதல் ரூ.70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Twenty Two Motors Flow Electric Scooter Concept Unveiled. Click for Details...
Story first published: Saturday, November 4, 2017, 16:26 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos