2016-17 நிதியாண்டின் இருசக்கர வாகனங்கள் விற்பனை விவரம்

Posted By:

லாபம், நஷ்டம், சேதம் என எல்லாம் கலந்த ஒரு நிலையில் தான் 16-17 நிதி ஆண்டை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்துள்ளன. பி.எஸ்.3 எஞ்சினுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தை அடுத்து பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கு அளித்த சலுகைகள் வரலாறு காணாதது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

பி.எஸ். 3 எஞ்சின் பற்றிய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு பல பாதக சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தாலும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சலுகைகளை அளித்து எப்படியோ நஷ்டத்திலிருந்து தப்பித்துவிட்டன. 2016 முதல் 2017 வரையிலான நிதியாண்டில் பெரும்பாலான இருச்சக்கர வாகனங்கள் நேர்மறையான வளர்ச்சியை கடந்துள்ளன.

ஹீரோ விற்பனை விவரம்

ஹீரோ விற்பனை விவரம்

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் கடந்த 16-17 நிதி வருடத்தில் 66,63,903 பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 15-16 நிதி ஆண்டில் 66,32,322 விற்பனை செய்திருந்த நிலையில் இதனுடன் ஒப்பீடுகையில் 0.48 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பெற்றுள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

ஹீரோ நிறுவனம் சென்ற மார்ச் மாதத்தில் மட்டும் 6, 09,951 அலகுகளை விற்பனை செய்துள்ளன. இது 2016 மார்ச் மாதத்தை காட்டிலும் 0.53 % அதிகமாகும். இதன்மூலம் தொடர்ந்து 6வது முறையாக 6 லட்சம் எண்ணிக்கையிலான வாகன விற்பனையை ஹீரோ நிறுவனம் தொடர்ந்து வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை நிலவரத்தை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

நிறுவனம் மார்ச் 2017 மார்ச் 2016 வளர்ச்சி
ஹீரோ மோட்டோகார்ப் 6, 09,951 6, 06,542 0.53%
வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

மொத்த 16-17 நிதியாண்டிற்கான கணக்கில் ஹீரோ நிறுவனம் 66,63,903 பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. 15-16 நிதி ஆண்டில் இது 66,32,322 அலகுகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஒரு ஆண்டிற்கான ஹீரோ நிறுவனத்தின் வளர்ச்சி 15-16 நிதியாண்டை காட்டிலும், தற்போது 0.43 சதவீதமாக உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை நிலவரத்தை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

நிறுவனம் 2016-17 நிதியாண்டு 2015-16 நிதியாண்டு வளர்ச்சி
ஹீரோ மோட்டோகார்ப் 66,32,322 66,06,542 0.48%
ஹோண்டா விற்பனை விவரம்

ஹோண்டா விற்பனை விவரம்

ஹோண்டா நிறுவனம் கடந்த 2016-17ம் நிதியாண்டில் ஸ்கூட்டர் விற்பனையில் இமாலாய சாதனையை படைத்துள்ளது. இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு 30 லட்சம் ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

ஹோண்டா நிறுவனம் இப்படியொரு சாதனையை படைக்க காரணமாகயிருந்தது நவி மினி பைக்குகள். ஆண்டின் இலக்கை விட அதிகப்படியான உற்பத்தியுடன் உருவாக்கப்பட்ட நவி மினி பைக்குகள், ஹோண்டா நிறுவனம் பெரும் லாபத்தை 2016-17ம் நிதியாண்டில் அடைய காரணமாகவுள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

ஹோண்டா நிறுவனம் கடந்த மார்ச் மாத விற்பனை நிலவரங்களை குறித்து சரியான தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் 2016-17ம் நிதியாண்டில் ஹோண்டா கிட்டத்தட்ட 50, 08,103 எண்ணிக்கையில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

கடந்த 2015-16ம் நிதியாண்டில் ஹோண்டாவின் விற்பனை மொத்தமாக 44, 83,462 அலகுகளில் மட்டுமே இருந்தது. இதன்மூலம் 2016-17ம் நிதியாண்டில் ஹோண்டா 12 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

பி.எஸ்.3 எஞ்சினை தடைசெய்து உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த பின், அதிரடியான சலுகைகளால் ஹோண்டா நிறுவனம் பெருத்த நஷ்டம் அடைவதிலிருந்து தப்பித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் 2016-17 நிதியாண்டு 2015-16 நிதியாண்டு வளர்ச்சி
ஹோண்டா 50, 08,103 44, 83,462

12%

மேலும் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 2016-17ல் 60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு விற்பனை விவரம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை விவரம்

உலகளவில் வரவேற்பு பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2017 மார்ச் மாத முடிவில் 60,113 அலகுகளில் தனது தயாரிப்புகளை உலகளவில் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 2015-16 நிதி ஆண்டை காட்டிலும் இந்தாண்டில் 60 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

இந்தியாவை பொருத்தவரை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அபரிவிதமான வளர்ச்சியை கடந்த சில மாதங்களாகவே பதிவு செய்து வருகிறது. இந்தியாவிலிருந்து பல உலக நாடுகளுக்கு 60,113 அலகுகளை ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த அடிப்படையில் கடந்தாண்டில் இந்நிறுவனம் 51,320 அலகுகளை ஏற்றுமதி செய்திருந்தது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனைகளில் ராயல் என்ஃபீல்டு 2016-17ம் நிதியாண்டில் 31 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவிலும் ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

கடந்த நிதி ஆண்டில் ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலவரத்தை ஒப்பீடு செய்து பார்க்கலாம்..

நிறுவனம் வர்த்தகம் மார்ச் 2017 மார்ச் 2016 வளர்ச்சி
ராயல் என்ஃபீல்டு உள்நாடு 58,549 50,059 17%
ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி 1,564 1,261 24%
ராயல் என்ஃபீல்டு மொத்தம் 60,113 51,320 17%
பஜாஜ் ஆட்டோ விற்பனை

பஜாஜ் ஆட்டோ விற்பனை

ஏற்றுமதி மற்றும் இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனம் சுமார் 2,44,235 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை 2015-16ம் நிதியாண்டோடு ஒப்பிட்டு பார்க்கையில் பஜாஜ் நிறுவனம் 8 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

மார்ச் 2016ல் பஜாஜ் நிறுவனம், 2,64,249 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எதன் காரணமாக பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை சரிந்தது என்பதுகுறித்த தெளிவான விவரங்களை தற்போது வரை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

இந்தியாவில் பி.எஸ். 3 எஞ்சின்கள் தடைசெய்யப்பட்டபோது மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் சலுகைகளை அறிவித்திருந்தது, இருந்தாலும் அது மக்களிடம் வரவேற்பு பெறவில்லை.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

ஆனால் பஜாஜ் தயாரிப்புகளின் விற்பனை இந்திய சந்தையில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், ஏற்றுமதி சந்தையில் 6 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் பஜாஜின் பெருமை மிகு தயாரிப்புகளாக இருக்கக்கூடிய பல்சர், டிஸ்கவர், வி-சிரீஸ் பைக்குகளின் விற்பனை முக்கிய பங்காற்றுகின்றன.

வாகன உற்பத்தியாளர்களை குஷிபடுத்திய 2016-17 நிதியாண்டு

கடந்த நிதி ஆண்டில் பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை நிலவரத்தை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

நிறுவனம் வர்த்தகம் மார்ச் 2017 மார்ச் 2016 வளர்ச்சி
பஜாஜ் உள்நாடு 1,51,449 1,76,788 -14%
English summary
Royal Enfield recorded its best-ever sales for the Month of March, Bajaj saw a negative growth of 14 per cent in its sales for March, 2017.
Story first published: Tuesday, April 4, 2017, 12:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark