2017 நவம்பர் முடிவில் இரட்டை இலக்கு விற்பனை அளவை பதிவு செய்த வாகன நிறுவனங்கள்..!!

2017 நவம்பர் முடிவில் இரட்டை இலக்கு விற்பனை அளவை பதிவு செய்த வாகன நிறுவனங்கள்..!!

By Azhagar

நவம்பர் மாத இறுதியில் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இரட்டை இலக்கு எண்ணில் விற்பனை திறனை அடைந்துள்ளன.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

இதை அக்டோபர் மாத விற்பனையோடு ஒப்பிட்டு பார்க்கையில், அனைத்து நிறுவனங்களுக்கும் நவம்பர மாத விற்பனை பெரிய லாபத்தை அளித்துள்ளது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

நவம்பரில் அதிக விழாகாலங்கள் வந்ததால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து விற்பனை செய்தன.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

இந்த ஒரு நடவடிக்கைகள் காரணமாக, 2017 நவம்பர் மாதம் ராயல் என்ஃபீல்டு, ஹோண்டா, பஜாஜ் மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளி தந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ:

பஜாஜ் ஆட்டோ:

2016ம் ஆண்டு நவம்பரை விட இந்தாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 236,970 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்தாண்டை விட 2017 நவம்பரில் இந்நிறுவனத்திற்கு 11% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் ஏற்றுமதியிலும் 25% அளவில் வாகனங்களை பஜாஜ் விற்றுள்ளது.

சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா

சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா

2017 நவம்பரில் சுஸுஜி 49,535 வாகனங்களை விற்று 37.1 சதவீத விற்பனையை பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் மட்டும் சுஸுகி 42,722 பைக்குகளை விற்றுள்ளது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை சுஸுகி மொத்தம் 3,89,950 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்தாண்டில் இந்த காலவரையில் 275,513 வாகனங்களை மட்டுமே அது விற்பனை செய்திருந்தது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

இந்தாண்டில் சில சுப்கிஷமான விற்பனையை பெற்றுள்ள சுஸுகி 2017 ஏப்ரல் முதல் நவம்பர் மாத விற்பனை வரை கடந்தாண்டை விட 38.26% விற்பனையை அதிகரித்துள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா

இந்தாண்டு நவம்பர் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய கம்பேக் என்று தான் சொல்ல வேண்டும்.

அக்டோபரில் விற்பனையில் சிறிய வீழ்ச்சி கண்ட ஹோண்டா, நவம்பரில் 41% பெற்று ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

2016 நவம்பரில் 325,480 மோட்டார் சைக்கிள் யூனிட்டுகளை விற்பனை செய்த ஹோண்டா 2017 நவம்பரில் 460,017 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

குறிப்பாக உள்நாட்டில் கடந்தாண்டு விற்பனையை விட ஹோண்டா 44 சதவீத விற்பனை திறனை பெற்றுள்ளது. அதேபோல ஏற்றுமதியில் 6 சதவீத விற்பனையை அதிகரித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சூப்பர் ஸ்டார் மோட்டார் சைக்கிளாக வலம் வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு, 2017 நவம்பர் டாப் விற்பனையை அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

2016ல் 57,313 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ள ராயல் என்ஃபீல்டு 2017 நவம்பரில் 70,126 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

மேலும் உள்நாட்டு விற்பனையில் 55,843 யூனிட்டுகளை விற்று, 21 சதவீத விற்பனை அளவை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

வாகன விற்பனை துறையில் இந்தியா மிகப்பெரிய சந்தை மதிப்பை பெற்று வருகிறது. அதை நிரூபிக்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு வாகன விற்பனை அதிகரித்து வருகிறது.

நவம்பரில் கலக்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை..!!

2018ம் ஆண்டிலும், தொடர்ந்து பல்வேறு வாகனங்கள் அறிமுகமாகவுள்ளன. அவற்றில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 பெரிய எதிர்பார்ப்புகளை பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
Read in Tamil: Two-Wheeler Manufacturers Report Double Digit Growth In November 2017 Sales. Click for Details...
Story first published: Saturday, December 2, 2017, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X