அமெரிக்காவின் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஷோரூம் பாண்டிச்சேரியில் திறப்பு
அமெரிக்காவின் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஷோரூம் பாண்டிச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
'யூஎம்' எனப்படும் யுனைட்டட் மோட்டாட்சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மியாமியை மையமாக வைத்து செயல்படும் இருசக்கர தயாரிப்பு நிறுவனம். கடந்த ஆண்டில் இந்தியாவில் வணிகத்தை துவங்கிய இந்நிறுவனத்தின் புதிய கிளை தற்போது பாண்டிச்சேரியில் துவங்கப்பட்டுள்ளது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2000ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. தற்போது 25 நாடுகளில் அதன் வணிகத்தை விரிவடையச் செய்துள்ளது. இந்தியாவில் ‘லோகியா ஆட்டோ' நிறுவனத்துடன் இணைந்து கூட்டு வணிகத்தை கடந்த ஆண்டு தான் துவங்கியது.

இந்திய நகரங்களில் விரைவிலேயே புதிய ஷோரூம்களை துவங்கி வரும் இந்நிறுவனம் தற்போது பாண்டிச்சேரி பகுயில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. இது பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில்லே பகுதியின் கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் அமைந்துள்ளது.

2,888 சதுர பரப்பளவிலான புதிய ஷோரூமில், 1,328 சதுர அடி கொண்ட ஷோரூம் பகுதியும் 1,560 சதுர அடி கொண்ட சர்வீஸ் நிலையத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்தியாவில் கிடைக்கக்கூடிய அனைத்து ‘யூஎம்' மாடல் பைக்குகளும் அதன் உதிரி பாகங்களும் இந்த ஷோரூமில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை, சர்வீஸ் மட்டுமல்லாது ‘ரோட்சைடு அசிஸ்டன்ஸ்' எனப்படும் சாலையோர உதவியும் இந்த ஷோரூம் மூலம் இனி பாண்டிச்சேரி பகுதியில் ‘யூஎம்' பைக் உரிமையாளர்களுக்கு கிடைக்க உள்ளது.

ஷோரூம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘யூஎம்-லோகியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் மிஸ்ரா கூறும்போது, "இந்திய இருசக்கர வாகன சந்தையில் 60% பங்களிப்பை தரும் தென்னிந்திய பகுதியில், பெரும்பாலான மக்களுக்கு யூஎம் பைக்குக்கள் சென்று சேரும் வகையில் எங்களது பாண்டிச்சேரி கிளை திறக்கப்பட்டுள்ளது" என்றார்.

சிறந்த மோட்டார் சைக்கிளிங் அனுபவத்தை தரும் ப்ரீமியம் மாடல்களான ‘யூஎம்' நிறுவனத்தின் ரெனெகாடே கமாண்டோ, ரெனகாடே ஸ்போர்ட்ஸ்-எஸ் ஆகிய மாடல்கள் இந்த ஷோரூமில் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாண்டிச்சேரி ஷோரூம் முகவரி:
வெஸ்டர்ன் மோட்டார்ஸ்,
நெ.108, கிழக்கு கடற்கரை சாலை,
பக்கமுடியன்பட்டு,
பாண்டிச்சேரி.
இந்தியன் ஃசெப்ட்டெய்ன் டார்க் ஹார்ஸ் பைக்கின் படங்கள்:


Click it and Unblock the Notifications








