ராயல் என்ஃபீல்டை தொடர்ந்து அதன் போட்டி நிறுவனமும் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது..!!

ராயல் என்ஃபீல்டை தொடர்ந்து அதன் போட்டி நிறுவனமும் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது..!!

By Arun

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டின் மாடல்களுக்கு போட்டி போடும் வகையில் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த ‘யூஎம்' எனப்படும் யுனைட்டட் மோட்டாட்சைக்கிள் நிறுவனம், இந்தியாவின் ‘லோஹியா மோட்டார்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் செயல்பட்டு வருகிறது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் கிடைக்கும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்க யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

இதன்படி, அதன் ரெனகேட் ஸ்போர்ட்ஸ்-எஸ் மோட்டார்சைக்கிள் மாடலின் விலையில் ரூ.4,199 மற்றும் ரெனகேட் கமாண்டோ மாடலின் மீது 5,684 ரூபாயும் விலை குறைப்பு செய்வதாக யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலாவதால் பெரும்பான்மையான மாநிலங்களில் மோட்டார்சைக்கிள்களின் விலை குறைய உள்ளது. எனினும் மாநிலத்திற்கு மாநிலம் இதில் வேறுபாடு இருக்கலாம்.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

ரெனகேட் ஸ்போர்ட்ஸ்-எஸ் மோட்டார்சைக்கிளின் தற்போதைய விலை ரூ.1,78,518 ஆகவும், ரெனகேட் கமாண்டோ மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1,84,397 ஆகவும் உள்ளது. (இரண்டும் புனே எக்ஸ்ஷோரூம் விலை அடிப்படையில்)

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

இந்த விலை குறைப்பு அறிவிப்பு தொடர்பாக யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் மிஷ்ரா கூறுகையில், மக்களுக்கு தரமான மோட்டார்சைக்கிள் அனுபவத்தையும், திருப்தியையும் தர உழைத்துவரும் யுஎம் நிறுவனம், ஜிஎஸ்டி மூலம் அடையும் பலன்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து தர எண்ணியே இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

தற்போதைய நிலையில் மோட்டார்சைக்கிள்களுக்கான வரி 30 சதவீதமாக இருக்கும் நிலையில், ஜிஎஸ்டியில் மோட்டார்சைக்கிள்களுக்கான வரி 28 சதவீதமாக குறைய உள்ளது.

தற்போது ராயல் என்ஃபீல்டின் போட்டி நிறுவனமாக கருதப்படும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் அதன் மாடல்களின் மீது விலை குறைப்பை அறிவித்திருக்கும் நிலையில், இதர நிறுவனங்களும் இது போன்ற அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைப்பு அறிவிப்பு..!!

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு நிச்சயம் அந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க உதவும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 23, 2017, 7:22 [IST]
English summary
Read in Tamil about UM motorcycle announces price cut on its range of models
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+