இந்தியாவில் டிசம்பரில் விற்பனைக்கு வரும் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர்..!!
இந்தியாவில் டிசம்பரில் விற்பனைக்கு வரும் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர்..!!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை பெற்றுள்ள அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர் வரும் டிசம்பரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

2016 ஆட்டோ எக்ஸ்போ-வின் போது அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அப்போதிலிருந்தே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரக்கூடிய நாளை இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் 2016ல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த ஸ்கூட்டரின் விலை எக்ஸ்-ஷோரூமின் படி ரூ.65000 என நிர்ணயம் செய்யப்பட்டது.
Recommended Video


புதிய ரக மற்றும் புதிய வடிவமைப்பு பெற்ற ஸ்கூட்டர்களை எதிர்பார்த்திருந்த இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை அறிவிப்பு மேலும் உற்சாகம் அளித்தது.

சிறந்த பவர் மற்றும் எளிதான பயணம் ஆகியவற்றை வழங்கும் வகையில் அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டரின் செயல்திறன் மற்றும் கையாளும் திறன் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சஸ்பென்ஷன் அமைப்பு ஸ்கூட்டருக்கான வடிவமைப்பில் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

இதனால் டிசம்பரில் வெளிவரும் அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரில் இந்த அமைப்புகள் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதை தவிர, முன் சக்கரத்தின் ஃபோர்க்ஸ் அமைப்பும் புதியதாக மாற்றப்படுவதாக உள்ளது. இவற்றை தவிர வேறு எந்த மாற்றங்களையும் அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டர் மேற்கொள்ளப்படாது.

மேலும் எஸ்.ஆர்.150 மாடலில் இதுபோன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதால் முன்னதாக அறிவிக்கப்பட்ட விலையை விட இந்த ஸ்கூட்டர் தற்போது கூடுதலாக ரூ.5000 வரை விலை பெறலாம்.

கூடுதலாக, மேம்படுத்தப்பட்ட அப்ரிலியா எஸ்.ஆர். 150 மாடலில் மாற்றக்கூடிய முன்பக்க சன்பென்ஷன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வகையில் இருக்கும்.

அதிக செயல்திறன், கவர்திழுக்கும் தோற்றம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அப்ரிலியா ஸ்கூட்டர் இந்தியாவில் நல்ல விற்பனை திறனை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








