யமஹா ஆர்15 பைக்கின் மின்சார மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!
யமஹா ஆர்15 பைக்கின் மின்சார மாடலை இந்தியாவில் களமிறக்க யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செயல்திறன் மிக்க பைக் மாடல்கள் மூலமாக இந்திய இளைஞர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நிறுவனம் யமஹா. குறிப்பாக, அந்த நிறுவனத்தின் ஆர்15 பைக் டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் நிறைவை தரும் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வலம் வருகிறது.

இந்தநிலையில், ஆர்15 பைக்கின் மின்சார மாடலை யமஹா நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்சார வாகனங்கள் நோக்கி இந்தியா விரைவாகவே திரும்பும் என்ற நோக்கில் இந்த பைக்கை உருவாக்கும் பணிகள் நடப்பதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்15 எலக்ட்ரிக் பைக் மட்டுமின்றி, பெட்ரோலில் இயங்கும் தனது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் அனைத்தையுமே நிறுத்திவிட்டு, முழுமையாக மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆய்வுகளையும் யமஹா மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து யமஹா இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் யசுவோ இஷிஹரா கூறுகையில்," ஏற்கனவே பல வெளிநாடுகளில் பேட்டரியில் இயங்கும் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறோம். எனவே, அவற்றை இந்தியா கொண்டு வருவதில் எந்த சிரமும் இருக்காது," என்று கூறினார்.
Recommended Video


அதேநேரத்தில், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில், தொடர்ந்து பெட்ரோல் பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் தயாரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்திய அரசின் கொள்கைகளின்படி, மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இஷிஹரா கூறி இருக்கிறார்.

இந்தியாவில் மின்சார பைக், ஸ்கூட்டர்களை உருவாக்குவதற்காக உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் யமஹா திட்டமிட்டுள்ளது. பேட்டரி மற்றும் மின்மோட்டார்களையும், அதற்கான உபகரணங்களையும் சப்ளை பெறுவதற்கான ஆயத்தப் பணிகளிலும் இறங்கி இருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ மோட்டார் ஷோவில் யமஹா நிறுவனம் மோட்டோராய்டு என்ற மின்சார பைக் கான்செப்ட்டை பார்வைக்கு வைத்திருந்தது. இதுதவிர, பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைப்ரிட் வகை மூன்றுசக்கர பைக் மாடலையும் காட்சிக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Trending DriveSpark YouTube Videos
Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here


Click it and Unblock the Notifications








