இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய யமஹா ஃபேஸர்250 பைக்: விலை உள்ளிட்ட முழு தகவல்கள்..!!
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய யமஹா ஃபேஸர்250 பைக்: விலை உள்ளிட்ட முழு தகவல்கள்..!!
ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் புதிய ஃபேஸர்250 பைக்கை சிறிது நாட்களாகவே இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது.

சிறிது நாட்களுக்கு முன்னர் கூட இந்த புதிய பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது யமஹாவின் இந்த புதிய ஃபேஸர்250 பைக் வரும் ஆகஸ்ட் 2017 முதல் முழு அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அக்டோபர் 2017 முதல் ஷோரூம்களை அடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்போர்ட்ஸ் டூரர் வகையைச் சேர்ந்த புதிய யமஹா ஃபேஸர்250 பைக், ஃஎப்இசட்25 பைக்கின் வழித்தோன்றலாக இருக்கும்.

புதிய ஃபேஸர்250 பைக்கின் ஒட்டுமொத்த டிசைனும் ஃஎப்இசட்25 பைக்கை தழுவி இருந்தாலும், இதன் முகப்பு முற்றிலும் ஏரோடைனமிக் வடிவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஃஎப்இசட்25 பைக்கில் உள்ளதைப் போன்றே இதில் எல்ஈடி ஹெட்லைட், இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

யமஹா ஃபேஸர்250 பைக்கில் அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலையும், 20 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய ஒற்றை சிலிண்டர் கொண்ட 250சிசி ஆயில் கூல்டு இஞ்சின் உள்ளது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

மேலும், புதிய ஃபேஸர்250 பைக்கில் இருபக்கமும் டிஸ்க் பிரேக் இருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அகலமான சீட் கொடுக்கப்பட்டுள்ளதால் தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற சொகுசை இந்த பைக் வழங்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் போது பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் ஆகிய மாடல்களுக்கு ஃபேஸர்250 போட்டியாக அமையும்.

யமஹா எஃப் இசட்25 பைக் ரூ.1.20 லட்சம் என்ற விலையில் கிடைத்து வரும் நிலையில் அதன் வழித்தோன்றலான புதிய யமஹா ஃபேஸர்250 பைக் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் விலை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் யமஹா எஃப்இசட்25 மற்றும் கேடிஎம் ட்யூக்250 பைக்குகளில் வருகைக்கு பிறகு 250சிசி பைக் செக்மெண்ட் புத்துணர்ச்சி பெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் புதியதொரு வரவாக இருக்கும் ஃபேஸர்250 பைக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்க நல்ல ஒரு சாய்ஸ் கொடுக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications