இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, 20 லட்சம் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்து, புதிய சாதனை ஒன்றை ஹோண்டா நிறுவனம் படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooter India-HMSI) நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 20 லட்சம் இரு சக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததுதான் அந்த சாதனை.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்த 20 லட்சம் இரு சக்கர வாகனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை (Made in India). 20 லட்சம் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி என்ற மைல்கல்லை எட்ட ஹோண்டா நிறுவனம் 17 ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

இதுவும் ஒரு சாதனைதான். வெறும் 17 ஆண்டுகளில் 20 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்த முதல் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஹோண்டாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அனைத்தையும் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

ஹோண்டா நிறுவனமானது, கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 2001ம் ஆண்டில்தான், முதன் முதலாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியது. இந்தியாவில் இருந்து ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்த முதல் இரு சக்கர வாகனம் ஆக்டிவா.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

ஆனால் முதல் 10 லட்சம் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஹோண்டா நிறுவனம் 14 ஆண்டுகளை எடுத்து கொண்டது. அதாவது இந்தியாவில் இருந்து 10 லட்சம் இரு சக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்ற மைல்கல்லை, கடந்த 2015ம் ஆண்டில்தான் ஹோண்டா நிறுவனம் எட்டியது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

எனினும் அடுத்த 10 லட்சம் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஹோண்டா நிறுவனத்திற்கு வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 17 ஆண்டுகளில் 20 லட்சம் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்து விட்டது ஹோண்டா.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

ஏற்றுமதியை தவிர்த்து விட்டு, உள்நாட்டு விற்பனை அளவில் பார்த்தாலும், ஹோண்டா நிறுவனம் நல்ல நிலையில்தான் இருக்கிறது. குறிப்பாக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை, இந்தியாவில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனம் என்றால், அது ஹோண்டா ஆக்டிவாதான். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 இரு சக்கர வாகனங்களின் பட்டியலில், ஹோண்டா ஆக்டிவாதான் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 3,10,851 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் இதே கால கட்டத்தில், இந்தியாவின் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் என கொண்டாடப்படும் ஹீரோ ஸ்பிளெண்டர் 2,47,116 என்ற எண்ணிக்கையில்தான் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஆனால் தொடர்ந்து பல மாதங்களாக, ஹீரோ ஸ்பிளெண்டரை காட்டிலும் ஹோண்டா ஆக்டிவாதான் அதிகம் விற்பனையாகி வருகிறது. இதன்மூலம் தொடர்ச்சியாக ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் டூவீலர்களை ஏற்றுமதி செய்து ஹோண்டா புதிய சாதனை..

முன்னதாக ஹோண்டா நிறுவனமானது, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா என மொத்தம் 28 மார்க்கெட்களுக்கு, இந்தியாவில் இருந்து இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Thursday, September 27, 2018, 14:53 [IST]
English summary
20 Lakh 2-Wheelers Exported: Honda Achieves New Milestone. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+