புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!
புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை விபரம் உள்பட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. 160சிசி செக்மென்ட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் இந்த மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹார்னெட் 160ஆர் பைக் நான்கு மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

முன்சக்கரத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குடன் சிபிஎஸ் பிரேக் நுட்பம் கொண்ட மாடலில் கிடைக்கும். அடுத்ததாக ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும். இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் டிசைனில் மாற்றங்கள் இல்லை. புதிய பாடி கிராஃபிக்ஸ் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அத்துடன், இந்த புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கிற்கு அடுத்து எல்இடி ஹெட்லைட்டுடன் வந்திருக்கும் இரண்டாவது ஹோண்டா பைக் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் எக்ஸ் வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகளும் முக்கிய அம்சங்கள்.

புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் 162.71சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.9 பிஎச்பி பவரையும், 14.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 276மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் அல்லது 130மிமீ டிரம் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் டைமண்ட் டைப் ஃப்ரேம் என்ற அடிச்சட்டத்தை பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

விலை விபரம்:
| வேரியண்ட் விபரம் | விலை விபரம் |
| ஸ்டான்டர்டு | ரூ.84.675 |
| சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் | ரூ.89,175 |
| ஏபிஎஸ் ஸ்டான்டர்டு | ரூ.90,175 |
| ஏபிஎஸ் டீலக்ஸ் | ரூ.92,675 |


Click it and Unblock the Notifications








