2018 ஹோண்டா சிபிஆர்250ஆர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!
புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் 2018 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் பிஎஸ்-4 எஞ்சினுடன் இந்த புதிய மாடல் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டட 249சிசி லிக்யூடு கூல்டு 4 வால்வு டிஓஎச்சி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.5 பிஎச்பி பவரையும், 22.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மணிக்கு 135 கிமீ வேகம் வரை தொடும் திறன் வாய்ந்தது.

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதேபோன்று, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருப்பது பைக்கிற்கு புதிய பொலிவை தருகிறது.

மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பும், புதிய மஃப்ளருடன் கூடிய சைலென்சரும் இந்த பைக்கில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள்.

இந்த பைக்கில் 13 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 167 கிலோ எடை கொண்டது.

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கில் 17 அங்குல ரிம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில்110மிமீ ட்யூப்லெஸ் டயரும், பின்சக்கரத்தில் 140மிமீ ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அதேபோன்று, முன்சக்கரத்தில் 296மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் இருப்பதுடன் இருசக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட சிறப்பான பாதுகாப்பு வசதியும் இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் புரோ-லிங்க் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் - மார்ஸ் ஆரஞ்ச் என்ற வண்ணக் கலவையிலும், மேட் ஆக்சிஸ் கிரே - ஸ்ட்ரைக்கிங் க்ரீன் என்ற வண்ணக் கலவையிலும், பியர்ல் யெல்லோ ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் என்று மொத்தமாக 4 வண்ணங்களிலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் கேடிஎம் ஆர்சி200, பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200, யமஹா ஃபேஸர்25 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கின் ஏபிஎஸ் பிரேக் இல்லாத மாடல் ரூ.1.63 லட்சம் விலையிலும், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.1.93 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர், இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 10 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








