கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட 2018 நின்ஜா 300 பைக்கை, சரியான நேரத்தில் சமயோசிதமாக லான்ச் செய்து, பிஎம்டபிள்யூ மற்றும் யமஹா நிறுவனங்களை மிரள செய்துள்ளது கவாஸாகி.

By Arun

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட 2018 நின்ஜா 300 பைக்கை, சரியான நேரத்தில் சமயோசிதமாக லான்ச் செய்து, பிஎம்டபிள்யூ மற்றும் யமஹா நிறுவனங்களை மிரள செய்துள்ளது கவாஸாகி. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய 2018 நின்ஜா 300 பைக்கை, கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் இன்று (ஜூலை 20ம் தேதி) லான்ச் செய்தது. புதிய நின்ஜா 300 பைக்கை வைத்து கவாஸாகி நிறுவனம் அடித்த மாஸ்டர் ஸ்ட்ரோக் காரணமாக பிஎம்டபிள்யூ மற்றும் யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆடிப்போயுள்ளன.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS) வசதியை, புதிய நின்ஜா 300 பைக்கில், கவாஸாகி நிறுவனம் ஸ்டாண்டர்ட் ஆப்ஷனாக வழங்கியுள்ளது. புதிய நின்ஜா 300 பைக்கின் 2 சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டிருப்பது (டியூயல் சேனல் ஏபிஎஸ்) கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

இதுதவிர புதிய கலர் மற்றும் கிராபிக்ஸ்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இனி எபோனி, கேண்டி ப்ளாஸ்மா ப்ளூ மற்றும் லைம் க்ரீன் என்ற 2 பிரகாசமான கலர்களிலும் நின்ஜா 300 பைக் கிடைக்கும். அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் தொடர்கிறது.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

புதிய நின்ஜா 300 பைக்கில் குறிப்பிடத்தகுந்த விஷயமே அதிரடியான விலை குறைப்புதான். ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லாத பழைய நின்ஜா 300 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.60 லட்சம். ஆனால் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய புதிய 300 நின்ஜா பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை வெறும் ரூ.2.98 லட்சம்தான்.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

அதாவது புதிய நின்ஜா 300 பைக்கின் விலையை கவாஸாகி நிறுவனம் ரூ.62 ஆயிரம் குறைத்துள்ளது. அத்துடன் டியூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால்தான் போட்டி நிறுவனங்கள் மிரண்டு போய் உள்ளன.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

குறிப்பாக சிங்கிள் சிலிண்டருடன் வரும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை, புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக், நேற்று முன் தினம்தான் (ஜூலை 18ம் தேதி) இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.99 லட்சம். இந்த பைக் லான்ச் செய்யப்பட்ட ஒரு நாள் இடைவெளியில், ரூ.2.98 லட்சம் என்ற மிகவும் சவாலான எக்ஸ் ஷோரூம் விலையில், புதிய நின்ஜா 300 பைக்கை (டிவின் சிலிண்டர்), கோதாவில் இறக்கி விட்டுள்ளது கவாஸாகி.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

கவாஸகி நிறுவன பைக்குகள் என்றாலே, விலை உயர்ந்தவை என்ற கருத்து நிலவி வருகிறது. அதை தவிடு பொடியாக்கும் முயற்சியில் தற்போது கவாஸகி நிறுவனம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் புதிய நின்ஜா 300 பைக்கின் விலையை ரூ.62 ஆயிரம் குறைத்துள்ளது கவாஸகி.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

இதன்மூலமாக 300 சிசி, டிவின் சிலிண்டர் செக்மெண்டில், இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான பைக் என்ற அந்தஸ்தை புதிய நின்ஜா 300 பெறுகிறது. பழைய வெர்ஷனுடன் ஒப்பிடுகையில், புதிய நின்ஜா 300 பைக்கின் தோற்றத்தில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

அதே 296 சிசி, DOHC, 8 வால்வ், லிக்யூட் கூல்டு, பேரல்லல் டிவின் சிலிண்டர் இன்ஜினுடன் புதிய நின்ஜா 300 பைக் தொடர்கிறது. இந்த இன்ஜின் 11,000 ஆர்பிஎம்மில் 39 பிஎஸ் பவரையும், 10,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

மாபெரும் விலை குறைப்பு காரணமாக, புதிய நின்ஜா 300 பைக் தனது உடன்பிறப்பான இஸட் 250 பைக்கையும் (Z 250) கூட பலவீனப்படுத்தி விட்டது என்றே சொல்ல வேண்டும். கவாஸகி நிறுவனத்தின் இஸட் 250 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 3.10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

எனினும் யமஹா நிறுவனத்தின் ஒய்இஸட்எப் ஆர் 3 (YZF-R3) பைக்தான், கவாஸகி நின்ஜா 300 பைக்கின் நேரடி போட்டியாளர். யமஹா YZF-R3 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 3.48 லட்சம். ஆனால் புதிய நின்ஜா 300 பைக்கின் விலை அதை விட 50 ஆயிரம் ரூபாய் குறைவு என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

யமஹா YZF-R3 பைக் சமீபத்தில்தான் ஏபிஎஸ் வசதியை பெற்றது. தற்போது புதிய நின்ஜா 300 பைக்கில், டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை வழங்கியிருப்பதுடன், விலையையும் YZF-R3 உடன் ஒப்பிடுகையில் 50 ஆயிரம் குறைத்துள்ளதால், யமஹா நிறுவனத்திற்கு நேரடியாக செக் வைத்துள்ளது கவாஸகி.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

எப்படி ஒரே அடியாக 62 ஆயிரம் ரூபாயை குறைக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. அது சாத்தியம்தான். ஏனெனில் 2018 கவாஸகி நின்ஜா 300 பைக், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. அப்டேட் செய்யப்பட்ட நின்ஜா 300 ஏபிஎஸ் பைக்கிற்கான புக்கிங் தொடங்கியுள்ளது.

கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW

தொடக்கத்தில் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் அன்லிமிடெட் கிலோ மீட்டர்கள் வாரண்டியை கவாஸகி நிறுவனம் வழங்குகிறது. ஆனால் இது மட்டும் லிமிடெட் பீரியட் ஆபர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, July 20, 2018, 19:12 [IST]
English summary
2018 New Kawasaki Ninja 300 Launched. Read in tamil
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+