புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

வெஸ்பா ஸ்கூட்டரின் புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது பியாஜியோ நிறுவனம். 2018 வெஸ்பா நோட் 125 (வெஸ்பா நைட் எடிசன்) என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் வெஸ்பா எ

By Saravana Rajan

வெஸ்பா ஸ்கூட்டரின் புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது பியாஜியோ நிறுவனம். இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்களின் வருகையால் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை போக்கிக் கொள்ளும் விதமாக, அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த புதிய வெஸ்பா ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் களமிறக்கி இருக்கிறது.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

2018 வெஸ்பா நோட் 125 (வெஸ்பா நைட் எடிசன்) என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரின் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.70,285 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

நைட் எடிசன் என்பதற்கு சான்றாக ஸ்கூட்டரில் ஏராளமான கரும் பூச்சுடன் கூடிய ஹெட்லைட் உள்ளிட்ட பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு உரித்தான பல்வேறு க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த ஸ்கூட்டரில் கருப்பு வண்ண அலாய் சக்கரங்கள், ஸ்டீல் ஹேண்டில் பார், சவுகரியமான இருக்கை அமைப்பு என பல சிறப்புகளுடன் வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் கருப்பு வண்ணத்தில் வந்துள்ளது. டிஜிட்டல் திரை மற்றும் அனலாக் மீட்டர் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

முன்புறத்தில் 110-70-11 அளவுடைய ட்யூப்லெஸ் டயரும், பின்புறத்தில் 120-70/10 அளவுடைய ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்ப்டடுள்ளன. முழுவதுமான மோனோகாக் எனப்படும் ஒற்றை உடல்கூடு அமைப்புடைய ஸ்டீல் பாடியில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இது அதிக உறுதியை வழங்கும்.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் விமான தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கலப்பு உலோக ஒற்றை தாங்கி அமைப்புடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஆட்டோ இக்னிஷன், சீரான டார்க் வெளிப்படுத்தும் திறன், துல்லியமான திருப்புதல் திறனை வழங்கும் ஹேண்டில்பார், குறைவான வேகத்தில் அதிக நிலைத்தன்மை வழங்கும் தொழில்நுட்ப யுக்திகள் இந்த ஸ்கூட்டரில் கையாளப்பட்டிருக்கின்றன.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த புதிய வெஸ்பா நோட் எடிசன் ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும்,9.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

125சிசி ரகத்தில் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ரூ.64,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும், சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் ரூ.68,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. புதிய வெஸ்பா நோட் எடிசன் ரூ.70,285 எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருப்பதால், இந்த ரகத்தில் அதிக விலை கொண்ட மாடலாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2018, 15:27 [IST]
English summary
2018 Vespa Notte 125 Night Edition launched in India.
மேலும்... #வெஸ்பா #vespa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+