2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

2019 மாடலாக மேம்படுத்தப்பட்ட புதிய கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஸ்டான்டர்டு மாடலாகவும், கேஆர்டி என்ற விசேஷ பதிப்பிலும் வந்துள்ளது.

By Saravana Rajan

2019 மாடலாக மேம்படுத்தப்பட்ட புதிய கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

2018 மாடலாக விற்பனையில் இருக்கும் கவாஸாகி நின்ஜா 650 பைக்குடன் இந்த 2019 மாடல் புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக் மாடல்களும் விற்பனை செய்யப்படும். அதேநேரத்தில், 2019 கவாஸாகி நின்ஜா 650 மாடல் கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.

2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இதனுடன் புதிய கேஆர்டி எடிசன் மாடலானது கவாஸாகி ரேஸிங் அணியின் ஸ்டிக்கர் கொண்டதாக இருக்கிறது. அத்துடன், இருக்கை அமைப்பு தாழ்வாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது கிளிபச்சை வண்ணத்தில் கிடைக்கும். இதன் செயல்திறன் சற்று கூடுதலாக இருக்கும்.

2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக்கில் பேரலல் டவின் சிலிண்டர்கள் கொண்ட 649சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67.2 பிஎச்பி பவரையும், 65.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. குயிக் ஷிஃப்டர் வசதியும் உள்ளது.

2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஓடோமீட்டர், டியூவல் டிரிப் மீட்டர், ரேஞ்ச் குறித்த தகவல், சராசரி மைலேஜ் குறித்த தகவல் என அனைத்து தகவல்களையும் பெறலாம்.

2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த பைக்கில் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 300மிமீ பெட்டல் டிஸ்க்குகளும், பின்சக்கரத்தில் 220மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் இருக்கிறது.

2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய கவாஸாகி நின்ஜா 650 ஸ்டான்டர்டு மாடல் ரூ.5.49 லட்சத்திலும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட கேஆர்டி மாடல் ரூ.5.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

2019 கவாஸாகி நின்ஜா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிலும் முன்பதிவு ஏற்கப்படுகிறது. புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக்கானது ஹோண்டா சிபிஆர் 650எஃப், பெனெல்லி டிஎன்டி 600ஜிடி உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 6, 2018, 16:20 [IST]
English summary
2019 Kawasaki Ninja 650 launched in India at Rs 5.49 lakhs.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+