2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

2019 மாடலாக வந்திருக்கும் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் ரேஸ் பைக்குகளில் இருப்பது போன்ற புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஹேண்டில்பார் அமைப்பு, கிராஷ் கார்டு மற்றும் ஃப்ரேமிலேயே இணைக்கப்பட்டு இருக்கும் ஃப்ரேம் ஸ்லைடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அல்கான்ட்ரா மாதிரியிலான இருக்கை ஆகியவை புதிது.

2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய அப்பாச்சி 180 பைக்கில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெள்ளை வண்ணத்திலான பேக்லிட்டுடன் கூடிய புதிய டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் இடம்பெற்றுள்ளது.

2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய அப்பாச்சி 180 பைக்கில் 177.4சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்ட் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 114 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றது.

2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு டியூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாடலிலும் கிடைக்கிறது.

2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய அப்பாச்சி 180 பைக் பியர்ல் ஒயிட், க்ளாஸ் பிளாக், டி கிரே, மேட் புளூ மற்றும் மேட் ரெட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

தற்போது புதுப்பொலிவுடன் வந்திருக்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 180 மாடலானது அப்பாச்சி 160 மற்றும் 200 இடையிலான சிறப்பான தேர்வாக இருக்கும். ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் சிறப்பான தேர்வாக இருக்கும்.

Article Published On: Tuesday, November 20, 2018, 16:06 [IST]
English summary
2019 TVS Apache RTR 180 Launched In India.
மேலும்... #டிவிஎஸ்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+