சபாஷ்.. பைக் ரேஸில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோரை பிடித்து சிறையில் தள்ளிய போலீசார்
பொது சாலையில் பைக் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோரை பிடித்து ஹைதராபாத் போலீசார் ஜெயிலில் தள்ளினர். இதனால், பொது சாலையில் பைக் ஓட்டும் சிறுவர்களால் ஏற்படும் விபத்துக்கள் குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறத
பொது சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோரை பிடித்து ஹைதராபாத் போலீசார் சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொது சாலைகளில் சிறுவர்கள் பைக் ஓட்டும் காட்சிகளை அன்றாடம் காண முடிகிறது. இதில், பல சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் செலுத்துவதும், முன்சக்கரத்தை தூக்கிக் கொண்டு அபாயகரமான பயணித்து சாகசம் செய்வதும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் அதிக அளவில் விபத்துக்களும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதுபோன்று பைக் சாகசங்களில் ஈடுபடும் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்புவது வழக்கம்.

சிறுவர்களின் எதிர்கால நலன்கருதி போலீசார் தரும் வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தி மீண்டும் பைக் சாகசங்களில் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இந்தநிலையில், கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்களில் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.

14 வயது சிறுவன் ஒருவன் பைக் சாகசத்தில் ஈடுபட்டபோது, அதில் பின்னால் அமர்ந்து இருந்த 12வயது சிறுவன் தவறி விழுந்ததில், பின்னால் வந்த டிரக் மோதி உயிரிழந்தான். மற்றொரு சம்பவத்தில் சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Recommended Video


இந்த சம்பவங்களையடுத்து, சிறுவர்கள் பைக் ஓட்டுவதற்கு முடிவு காணும் விதத்தில், ஹைதராபாத் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மேலும், சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோரை பிடித்து சிறையில் தள்ளுவதற்கும் முடிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த சூழலில், 18வயதுக்கும் கீழ் உடைய சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோரில் 4 பேரை பிடித்து ஒரு நாள் சிறையில் அடைத்து தண்டனை அளித்தனர். மேலும், தொடர்ந்து தவறு செய்யும் சிறுவர்களை சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக் கைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்துள்ளன. பிள்ளைகளை கடைக்கு அனுப்பி பொருட்கள் வாங்க சொல்லும்போதும், டியூஷன் அனுப்பும்போது அவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பைக் ரேஸில் ஈடுபடும் சிறுவர், அவர் ஓட்டி வரும் வாகனத்தின் உரிமையாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும். அத்துடன், பெற்றோர் மீதும் நடவடிக்கை பாயும் என்று ஹைதராபாத் போலீசார் எச்சரித்துள்ளனர்.

பெற்றோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையடுத்து, சிறுவர்கள் பைக் சாகசத்தில்ல ஈடுபடும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஹைதராபாத் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Source: DC
இந்த விபத்தை பார்த்த பின்னர் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதுதான்!

வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. அந்த வகையில், இப்போது பார்க்கப்போகும் வீடியோவில் ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

வாகன ஓட்டுனர்களின் அஜாக்கிரதையான செயல்களால்தான் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்பட காரணம். அந்த வகையில், இந்த வீடியோவில் கார் ஒன்று சாலையின் குறுக்கே நுழைய விழைகிறது.

அப்போது அந்த வழியாக வரும் ஸ்கூட்டரை ஓட்டியவர், கார் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்து நிறுத்த முயல்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக பிரேக் பிடித்தவுடன் ஸ்கூட்டர் தலைக்குப்புற கவிழ்ந்துவிடுகிறது.

இதில், அந்த ஸ்கூட்டரில் வரும் சிறுமி உள்பட மூன்று பேர் கீழே விழந்து விடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பெரிய அளவிலான காயங்கள் இல்லாமல் எழுந்து விடுகின்றனர்.

ஆனால், அதன்பிறகு ஸ்கூட்டரை தூக்க அந்த குடும்பஸ்தர் முற்படுகிறார். அப்போதுதான் அந்த ஆச்சரியமான சம்பவம் நடக்கிறது.

எதிர்பாராதவிதமாக, அந்த ஸ்கூட்டர் நிமிர்த்தும்போது ஆக்சிலரேட்டர் மீது கை பட்டவுடன் அந்த ஸ்கூட்டர் சீறிப் பாய்ந்து ஓடத் துவங்குகிறது.

அந்த ஸ்கூட்டரை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அந்த குடும்பஸ்தர் தோல்வியடைந்து விட்டு விடுகிறார்.

தானாக ஓடும் அந்த ஸ்கூட்டர் அந்த சாலையில் பின்னால் வரும் ஒரு வாகனத்துடன் மோதி கீழே விழுகிறது.

மிக அரிதான இந்த சம்பவ வீடியோவை பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிஞ்சுகிறது. ஏனெனில், ஸ்கூட்டர் தானாக ஆக்சிலரேட்டர் முறுக்கிக் கொண்டு ஓடுவதுதான்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம், ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் கீழே விழந்துவிட்டால், முதலில் எஞ்சினை ஆஃப் செய்த பின்னரே தூக்க வேண்டும்.

சில வேளைகளில் ஆக்சிலரேட்டர் கைப்பிடியில் ஏதேனும் பிரச்னை இருந்தால் இதுபோன்று நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஸ்கூட்டர், பைக் கீழே விழுந்தால் இனி கவனமாக கையாளுங்கள்.

இந்த விபத்திற்கு ஸ்கூட்டரின் சக்கரங்கள் திடீரென பூட்டிக் கொள்வதும் காரணமாக தெரிகிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருந்தால், இதுபோன்ற விபத்துக்கள் தவிர்க்க முடியும்.
ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்தவிட்ட இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ பதிவுகளை இப்போது பாருங்கள். நிச்சயம் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போதும், கீழே விழுந்தால் தூக்கும்போது எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பது புரியும்.


Click it and Unblock the Notifications








