ராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே
மிக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என விரும்புவர்களின் முதல் சாய்ஸ் ராயல் என்பீல்டுதான். ஆனால் லாங் டிஸ்டன்ஸ் ரைட் செல்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலான மேலும் சில பைக்குகளும் உள்ளன.
மிக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என விரும்புவர்களின் முதல் சாய்ஸ் ராயல் என்பீல்டுதான். ஆனால் லாங் டிஸ்டன்ஸ் ரைட் செல்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலான மேலும் சில பைக்குகளும் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அப்படி ராயல் என்பீல்டுக்கு மாற்றாக திகழும் பைக்குகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹா பேஸர் 250
விலை: ரூ.1.29 லட்சம், எக்ஸ் ஷோரூம், டெல்லி
யமஹா என்ற நம்பகத்தன்மை வாய்ந்த பெயருடன் பேஸர் 250 விற்பனைக்கு வருகிறது. மிகவும் ஸ்மூத் ஆன இன்ஜினை பேஸர் 250 பைக் பெற்றுள்ளது. பேஸர் 250 ஃபுல்லி ஃபேர்டு பைக், எப்இஸட் 25 பைக்கை அடிப்படையாக கொண்டது.

லாங் டிஸ்டன்ஸ் டூர் செல்ல, யமஹா பேஸர் 250 பைக் மிகவும் ஏற்றது. பலத்த காற்று வீசும்போதும், அதிவேகத்தில் செல்வதற்கான வசதிகள் யமஹா பேஸர் 250 பைக்கில் உள்ளன. ஆல் எல்இடி ஹெட் லேம்ப் சிஸ்டத்தை பெற்றுள்ள யமஹா பேஸர் 250 பைக்கின் டிசைன் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கிறது.

யமஹா பேஸர் 250 பைக்கில், 249 சிசி, ஆயில் கூல்டு ப்ளஸ் ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.4 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது.

பஜாஜ் டோமினார் 400
விலை: ரூ.1.48 லட்சம், எக்ஸ் ஷோரூம், டெல்லி
கொடுக்கும் பணத்திற்கு வொர்த் ஆன பைக் பஜாஜ் டோமினார் 400. இந்திய மார்க்கெட்டில், பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்த பைக்கிற்கான மூல சக்தி, 373 சிசி, லிக்விட் கூல்டு, ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜினில் இருந்து கிடைக்கிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும். ஃபுல் எல்இடி ஹெட் லேம்ப் செட் அப் உடன் பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனைக்கு வருகிறது. இரவு நேரங்களில் பயணம் செய்ய மிகவும் உகந்த பைக் இது.

மிகவும் சௌகரியமான ரைடிங் பொஷிசன், ப்யூயல் இன்ஜெக்ஸன் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆகியவை, மார்க்கெட்டில் கிடைக்கும், லாங் டிஸ்டன்ஸ் ரைடிங்கிற்கு ஏற்ற பைக்குகளில் ஒன்றாக பஜாஜ் டோமினார் 400 பைக்கை மாற்றுகின்றன.

ஹோண்டா சிபிஆர் 250
விலை: ரூ.1.64 லட்சம், எக்ஸ் ஷோரூம், டெல்லி
பிராண்ட் வேல்யூ, ஸ்போர்ட்டி லுக், ஹோண்டா நிறுவனத்திற்கே உரித்தான ஸ்மூத்னெஸ் ஆகியவற்றால் சிபிஆர் 250 பைக் புகழ்பெற்று விளங்குகிறது. ஹோண்டா நிறுவனம் சமீபத்தில், இந்த ஸ்போர்ட் டூரர் பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனான சிபிஆர் 250ஆர் பைக்கை இந்தியாவில் லான்ச் செய்தது.

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த டூரர் பைக்கான விஎப்ஆர் 1200எப் பைக்கால் ஈர்க்கப்பட்டு, இந்த பைக் உருவாக்கப்பட்டிருக்கலாம். புதிய சிபிஆர் 250 பைக், ஆல் எல்இடி ஹெட் லேம்ப் உடன் விற்பனைக்கு வருகிறது.

ஆனால் எஞ்சிய அனைத்து அம்சங்களும், பழைய வெர்ஷனை போலவேதான் உள்ளன. இந்த பைக் மிகவும் சௌகரியமான ரைடிங் பொஷிசனை பெற்றுள்ளது. எந்நேரமும் மூன்று இலக்க வேகத்திலேயே பறக்க தேவையான சக்தியும் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கில், 249.6 சிசி, லிக்யூட் கூல்டு இன்ஜினை வழங்கியுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 26.1 பிஎச்பி பவர் மற்றும் 22.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறி பறக்க உதவி செய்கிறது.

பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220
விலை: ரூ.95,923, எக்ஸ் ஷோரூம், டெல்லி
இந்த பைக்கின் 180 சிசி வெர்ஷன்தான், இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் மலிவான க்ரூசியர் பைக். இந்த பைக்கின் க்ரூஸ் வேரியண்ட், ஸ்போக் வீல்ஸ் மற்றும் பெரிய விண்டு ஸ்கீரின் உடன் விற்பனைக்கு வருகிறது.

கடினமான சாலைகளில் செல்ல ஸ்போக் வீல்களும், நெடுஞ்சாலைகளில் எளிதாக பயணிக்க பெரிய விண்டு ஸ்கீரினும் உதவுகின்றன. அவென்ஜர் க்ரூஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 220 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 18.8 பிஎச்பி பவரையும், 17.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பஜாஜ் அவென்ஜர் 150 பைக் கூட மார்க்கெட்டில் கிடைக்கவே செய்கிறது. ஆனால் லாங் டிஸ்டன்ஸ் ரைடிங்கிற்கு அவென்ஜர் 220 பைக்தான் மிகவும் ஏற்றது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பெரிய இன்ஜினே இதற்கு காரணம்.

மஹிந்திரா மோஜோ
விலை: ரூ.1.79 லட்சம், எக்ஸ் ஷோரூம், டெல்லி
மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்று மோஜோ. அயராது உழைக்கும் இன்ஜினை பெற்று நல்ல பேலன்ஸை வழங்கும் இந்த பைக் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டு விட்டது. இந்த பைக்கில் 295 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜின், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் ஸ்மூத் ஆக திகழ்கிறது.

மஹிந்திரா மோஜோவில் உள்ள பெரிய 21 லிட்டர் டேங்க், ரிலாக்ஸான ரைடிங் பொஷிசன், ஓட்டுபவருக்கு மிகுந்த நம்பிக்கையை வழங்கும் டயர்கள் ஆகியவை, இந்த பைக்கை லாங் டிஸ்டன்ஸ் ப்ரெண்ட்லியாக மாற்றுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








