மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

2018ம் ஆண்டு முடிவடைய இன்னும் 6 மாதங்களே உள்ளன. இந்த 6 மாத காலத்தில் பல புதிய பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

By Arun

2018ம் ஆண்டு முடிவடைய இன்னும் 6 மாதங்களே உள்ளன. இந்த 6 மாத காலத்தில் பல புதிய பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், ஒரு சில பைக்குகளுக்காக, ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பைக்குகள் எப்போது லான்ச் ஆகிறது? அதில் உள்ள வசதிகள் என்னனென்ன? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

ராயல் என்பீல்டு இன்டெர்செப்டார்

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜூலை 2018

கோவாவில் நடைபெற்ற ரைடர் மேனியா நிகழ்ச்சியில், இன்டெர்செப்டார் பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இன்டெர்செப்டார் பைக், கோடை காலத்தில் இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாக பல சர்வதேச மார்க்கெட்களில் இன்டெர்செப்டார் லான்ச் செய்யப்பட்டு விட்டது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

ராயல் என்பீல்டு இன்டெர்செப்டார் பைக்கில், புதிதாக உருவாக்கப்பட்ட 650 சிசி பேரலல்-டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிக்யூட் கூல்டு இன்ஜினான இது, அதிகபட்சமாக 46 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

இன்டெர்செப்டார் பைக்கின் மற்றொரு விசேஷமான அம்சம் ஏபிஎஸ். இந்திய மார்க்கெட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் அறிமுகமாகும் முதல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் என்ற சிறப்பை இன்டெர்செப்டார் பெறவுள்ளது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

ராயல் என்பீல்டு இன்டெர்செப்டார் பைக்கின் விலை 3 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குக்கு கடும் போட்டியை, ராயல் என்பீல்டு இன்டெர்செப்டார் பைக் வழங்கும்.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜூலை 2018

கோவா ரைடர்மேனியா நிகழ்ச்சியில், இன்டெர்செப்டார் பைக்குடன் சேர்த்து, கான்டினென்டல் ஜிடி 650 பைக்கையும், ராயல் என்பீல்டு நிறுவனம் காட்சிபடுத்தியிருந்தது. புதிய பேரலல்-டிவின் இன்ஜினுடன் அறிமுகமாகும் 2வது பைக் இதுவாகும்.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக்குகளிலேயே அதிக விலை கொண்ட பைக்காக கான்டினென்டல் ஜிடி 650 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் லான்ச் செய்யப்படவுள்ளதால், கான்டினென்டல் ஜிடி 535 பைக்கை, இந்திய மார்க்கெட்டில் இருந்து சமீபத்தில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் கைவிட்டது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

இன்டெர்செப்டார் பைக்கின் லிக்யூட் கூல்டு இன்ஜினை போல், கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் இன்ஜினும் 46 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

ஹூரோ எக்ஸ் பல்ஸ்

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-செப்டம்பர் 2018

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹுரோ எக்ஸ் பல்ஸ் பைக்கை, 2018 ஆட்டோ எக்ஸ்போவில், ஹுரோ நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் மலிவான அட்வென்ஜர் பைக்காக இது இருக்கும். அதாவது இதன் விலை 1.10 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

இன்ஜினில் ஏற்பட்ட ஓர் சிறிய பிரச்னையால் இம்பல்ஸ் பைக் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது. அப்படிப்பட்ட குறைகளை எல்லாம், எக்ஸ் பல்ஸ் களையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

ஹூரோ எக்ஸ் பல்ஸ் பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப், லாங்க் டிராவல் சஸ்பென்ஸன், ட்யூயல் பர்பஸ் டயர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். ஹுரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக்கை அடிப்படையாக கொண்டு, எக்ஸ் பல்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200 பைக்கும் விரைவில் லான்ச் ஆகவுள்ளது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

இதில், 200 சிசி இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 18.2 பிஎச்பி பவரையும், 17.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் 2 பைக்குகளிலும் கியரிங்கில் வித்தியாசம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர்

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜுன்/ஜுலை 2018

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் இந்தியாவில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய அளவில் சர்வதேச மார்க்கெட்களுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் விரைவில் இந்தியாவிலும் லான்ச் ஆகவுள்ளது. 50,000 ரூபாய் என்ற அளவில் இதற்கான புக்கிங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படவுள்ள மிகவும் மலிவான விலை கொண்ட பைக்காக ஜி 310ஆர் இருக்கலாம். அதாவது இதன் விலை 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக், கேடிஎம் 390 டியூக் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் உள்ளதை போன்று பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கிலும், ரிவர்ஸ் இன்க்ளினிட் இன்ஜின்தான் பொருத்தப்படுகிறது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

இந்த 313 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் எடை 158 கிலோவாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

பிஎம்டபிள்யூ ஜிஎஸ் 310 ஆர்

லான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜுன்/ஜுலை 2018

ஜி 310ஆர் பைக்குடன் இணைந்து, அதன் அட்வென்ஜர் வெர்ஷனான, ஜிஎஸ் 310 ஆர் பைக்கையும் பிஎம்டபிள்யூ இந்தியாவில் லான்ச் செய்யவுள்ளது. இந்த பைக்கிலும் அதே 313 சிசி இன்ஜின்தான் பொருத்தப்படுகிறது. இதுவும் 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது?

பிஎம்டபிள்யூ ஜிஎஸ் 310 ஆர் பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. இதன் எடை 169.5 கிலோவாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
5 most AWAITED motorcycle launches of 2018; Hero XPulse to Royal Enfield Interceptor. read in tamil.
Story first published: Tuesday, June 5, 2018, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X