ஸ்கூட்டரில் சீறிப்பாய்ந்த 5 வயது சிறுமி.. தந்தைக்கு கடும் தண்டனை கொடுத்த அதிகாரிகள்.. வைரல் வீடியோ..

5 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை, ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த அவரது தந்தைக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமி ஸ்கூட்டர் ஓட்டுவது தொடர்பான வீடியோ வைரலானதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

By Arun

வெறும் 5 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை, ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த அவரது தந்தைக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமி ஸ்கூட்டர் ஓட்டுவது தொடர்பான வீடியோ வைரலானதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

டிரைவிங் லைசென்ஸ் பெறாமல், வாகனங்களை இயக்குவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. இந்திய சட்ட திட்டங்களின்படி 18 வயது நிரம்பிய ஒருவரால்தான், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெற முடியும்.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

ஆனால் 18 வயது நிரம்புவதற்கு முன்னரே, மைனர் வயது சிறார்கள் பலர் வாகனங்களை ஓட்ட தொடங்கி விடுகின்றனர். உரிய வயதை எட்டுவதற்கு முன்னதாகவே, அதுவும் மிக மிக குறைவான வயதில் அவர்கள் வாகனங்களை ஓட்ட தொடங்கி விடுவதால், விபத்து அபாயம் எழுந்துள்ளது.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

அப்படிப்பட்ட சிறார்களின் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஒரு சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

வெறும் 5 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை, டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை ஓட்ட, அவரது தந்தை அனுமதித்ததே இந்த பரபரப்பிற்கு காரணம். இது தொடர்பான வீடியோ வெளியாகி கேரளா மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சம்பவம் கொச்சியில் நடைபெற்றுள்ளது. ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ஒரே ஸ்கூட்டரில் பயணிக்கின்றனர். அப்போது ஸ்கூட்டரை கண்ட்ரோல் செய்து ஓட்ட, தனது 5 வயது மகளுக்கு தந்தை அனுமதி கொடுத்து விடுகிறார்.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

இதன்பின் அந்த சிறுமி ஃப்ளோர் போர்டில் நின்று கொண்டு, ஸ்கூட்டரை நல்ல வேகத்தில் ஓட்டி செல்கிறார். போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, அந்த வழியாக காரில் வந்தவர்கள் இதனை வீடியோவாக எடுத்தனர்.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

5 வயதே நிரம்பிய சிறுமியை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்தது தவிர, வேறு சில விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன. 2 சீட்டர் ஸ்கூட்டரான இதில், 4 பேர் பயணித்துள்ளனர். அத்துடன் ஆண் மட்டுமே ஹெல்மெட் அணிந்துள்ளார். எஞ்சிய 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஹெல்மெட் அணியவில்லை.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

இந்த வீடியோ வெளியான தினத்திலேயே வைரலாக பரவ தொடங்கியது. இதனால் வீடியோ வெளியான உடனே, கேரள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன்பின் 5 வயது சிறுமியை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தந்தையின் லைசென்ஸ், அன்றைய தினம் மாலையே சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

அவரின் லைசென்ஸ் ஒரு வருட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் காலம் முடியும் வரை அந்த நபரால், சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட முடியாது. கேரள மோட்டார் வாகன துறை (Motor Vehicle Department-MVD) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

இந்த தண்டனையுடன் மட்டும் அந்த நபர் தப்பிக்க போவதில்லை. கொச்சியில் உள்ள எடப்பள்ளி போலீசார்தான் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. எனினும் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

உரிய வயதை எட்டுவதற்கு முன்னால், பொது சாலைகளில் வாகனம் ஓட்டுவது சட்ட விரோதமானது. பாதுகாப்பற்றதும் கூட. இந்த வகையில் மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

ஏனெனில் முறையான பயிற்சி இன்றி வாகனம் ஓட்டுபவர்களால், சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்தியாவில் சமீப காலமாகவே விபத்துக்களின் எண்ணிக்கையும், அதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

5 வயதேயான சிறுமி ஸ்கூட்டர் ஓட்டியதால் தந்தைக்கு கடும் தண்டனை.. சாலையில் சீறிப்பாயும் வைரல் வீடியோ..

குடி போதையில் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது உள்ளிட்டவைகளே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அதே நேரத்தில், உரிய பயிற்சி பெறாமல் பொது சாலைகளில் வாகனம் ஓட்ட வருபவர்களும், விபத்துகளுக்கு ஒரு காரணமாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

Source: Asianetnews

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 31, 2018, 13:41 [IST]
English summary
5-Year old girl rides a scooter. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+