140 கிமீ வேகத்தில் பறந்த பஜாஜ் டோமினார்... ஏபிஎஸ் மட்டும் இல்லாட்டி... !!

By Saravana Rajan

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருப்பது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரங்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

சக்திவாய்ந்த பைக்குகள் பெருகி வரும் இவ்வேளையில், அதற்கு இணையான அளவு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏபிஎஸ் உள்ளிட்ட சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் அத்தியாவசியமாக மாறி இருக்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

இதற்கு சான்றாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பஜாஜ் டோமினார் ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஒரு இளைஞர் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் ஓட்டிச் செல்கிறார். பின்னால், ஒருவர் அமர்ந்திருப்பதாக சொல்கிறார்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

தனது பைக் ஓட்டும் திறமையை காட்டும் விதத்தில், பைக் செல்லும் வேகத்தை ஹெல்மெட் கேமரா மூலமாக பதிவு செய்துள்ளார். அப்போது அந்த பைக் 140 கிமீ வேகத்தை நெருங்கி செல்கிறது. நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்வது ஒரு சுகானுபவத்தை கொடுப்பதாக நினைத்து ஆக்சிலரேட்டரை திருகி செல்கிறார்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் சாலை ஓரத்தில் நிற்கும் ஒருவர், திடீரென அந்த சாலையை கடக்க பாய்ந்து செல்கிறார். அப்போது, பஜாஜ் டோமினாரை ஓட்டுபவர், பைக்கை கட்டுப்படுத்துவதற்கு பிரேக் பிடிக்கிறார். அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் அந்த பாதசாரி மீது பைக் மோதுவது தவிர்க்கப்படுகிறது. 3 பேர் உயிர்களை ஏபிஎஸ் காவந்து செய்யப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

வினாடி நேரத்தில் நடந்த இந்த காட்சி, வீடியோவில் பதிவாகி இருக்கிறது. பைக்கில் சென்றவர் பிரேக் பிடித்து சரியாக 5.3 வினாடிகளில் 138 கிமீ வேகம் என்பது 101 கிமீ வேகமாக குறைகிறது. அந்த பாதசாரி மீது மோதாத வண்ணம் பைக் அந்த இடத்தை கடக்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

அவசர சமயத்தை எந்த விபரீதமும் இல்லாமல், பஜாஜ் டோமினார் பைக் ஓட்டுனர் கடந்து செல்வதற்கு ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சரியான நேரத்தில் பஜாஜ் டோமினார் பைக்கில் சென்றவர்களையும், சாலையை கடக்க பாய்ந்தவரையும் காவந்து செய்ததற்கு, ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்தான் உதவி செய்துள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இல்லையெனில், திடீரென பிரேக் பிடிக்கும்போது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்து பைக்கை ஓட்டியவர் பெரும் காயமடைந்திருக்க வாய்ப்புள்ளது. பஜாஜ் டோமினார் 400 பைக்கில் முன்சக்கரத்திற்கான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கை விபத்திலிருந்து காப்பாற்றிய ஏபிஎஸ் பிரேக்!

இந்த சம்பவத்தில் பஜாஜ் டோமினார் 400 பைக்கை ஓட்டியவர் அதிவேகத்தில் செல்வதும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். நெடுஞ்சாலை என்றாலே, வேகமாக செல்வதற்கான ரேஸ் டிராக் போல கருதி ஓட்டுவதை பலரும் பின்பற்றுகின்றனர். இது மிக மோசமான விபத்திற்கும், உயிருக்கு உலை வைக்கும் விஷயமாகவே மாறிவிடும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தின் மகிமையை உணர்த்தும் வீடியோவை இப்போது காணலாம். இந்த வீடியோவை பார்ப்பவர்கள், நெடுஞ்சாலைகளிலும் நிதானத்தை கடைபிடித்தால் சந்தோஷமே.


திறந்தவெளி மற்றும் சாலை ஓரத்தில் காரை பார்க்கிங் செய்வோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!

திறந்தவெளி மற்றும் சாலை ஓரத்தில் காரை பார்க்கிங் செய்வோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!

இப்போது கார் வாங்கும் பெரும்பாலானோரது வீட்டில் காரை நிறுத்துவதற்கான இடவசதி இருப்பதில்லை. இதனால், தெரு ஓரத்திலேயே பலர் காரை நிறுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதுபோன்று காரை நிறுத்தி வைக்கும்போது, பல லட்சம் போட்டு வாங்கிய கார் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், சாலை ஓரத்தில் காரை நிறுத்தி வைப்பவர்கள், காரை பாதுகாப்பதற்கும், கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

முதலுக்கே மோசம்...

முதலுக்கே மோசம்...

வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள், சூரிய ஒளி, மழை மற்றும் பனிப் பொழிவு என அனைத்து கால நிலைகளின் உக்கிரத்தால் பெயிண்ட் பாதிக்கப்படும். இதனால், புதிய கார்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பொலிவு இழந்துவிடும். இதன் காரணமாக, காரின் ரீசேல் மதிப்பு வெகுவாக குறையும். மேலும், வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் என்றாலே இளக்காரமாக பாரக்கப்படும்.

உபாயம்

உபாயம்

வெளியில் காரை நிறுத்துபவர்கள், தரமான கவர்களை வாங்கி மூடி வைக்கவும். தரமற்ற கவர்களை கண்டிப்பாக தவிர்க்கவும். இதன்மூலமாக, ஓரளவு கால நிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க முடியும்.

ஆபத்து

ஆபத்து

வீட்டிற்கு அருகிலேயே என்று நினைத்துக் கொண்டு மரம் இருக்கும் பகுதிகளில் காரை நிறுத்த வேண்டாம். குறிப்பாக, தென்னை மரத்திற்கு கீழே நிறுத்துவதை அறவே தவிர்க்கவும். மரக் கிளைகள், மட்டை அல்லது தேங்காய் விழுந்து காரில் பெரிய பாதிப்புகளையும், செலவுகளையும் இழுத்துவிட்டு விடும். எனவே, மரம் இல்லாத இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தவும்.

துரு பிடிக்கும்...

துரு பிடிக்கும்...

மழைக்காலத்தில் தெருவில் நிறுத்தப்படும் கார்கள் எளிதாக துருப் பிடிக்கும். எனவே, வெயில் காலம், மழைக் காலம் என இரண்டும் துவங்குவதற்கு முன்னதாகவே அண்டர் பாடி கோட்டிங் மற்றும் கார் பாடியை காவந்து செய்வதற்கு வேக்ஸ் கோட்டிங் செய்து விடுவது நல்லது. சில ஆயிரங்களை பார்த்தால், பல லட்சம் மதிப்புடைய கார் மதிப்பிழந்து போகும். கடற்கரை ஓரங்களில் கார் வைத்திருப்பவர்கள் டீலரில் சொன்னால், அண்டர் பாடி கோட்டிங்குடன் சேர்த்து ஆயில் கோட்டிங் செய்து கொடுப்பர். இதனால், துருப் பிடிக்கும் வாய்ப்பு குறையும்

மழை நேரத்தில்...

மழை நேரத்தில்...

மழை நேரத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் மற்றும் தண்ணீர் ஓடும் பகுதிகளில் காரை நிறுத்தி வைக்காதீர். கவனித்து பாதுகாப்பு இடங்களில் நிறுத்தி வையுங்கள்.

கவனம்

கவனம்

பள்ளிக்கூடம் அல்லது சிறுவர்கள் விளையாடும் பகுதியில் நிறுத்தினால் சற்று கூடுதல் கவனம் தேவை. சிறுவர்கள் விளையாட்டுத் தனமாக காரில் ஆணி போன்றவற்றால் கீறல்களை போட்டுவிடுவர். எனவே, அந்த பகுதியில் கவர் போட்டு மூடி வைப்பது மிக அவசியம்.

சன் ஃபிலிம்

சன் ஃபிலிம்

சூரிய ஒளியில் நேரடியாக நிறுத்தியிருக்கும் கார்களின் உட்புறத்தில் டேஷ்போர்டு பிளாஸ்டிக் மற்றும் இதர பாகங்கள் வெளுத்து போவதுடன் பாதிப்பை சந்திக்கும். இதற்கு, அரசு அனுமதித்துள்ள அளவுக்கு இணையான பார்வை திறன் கொண்ட சன் ஃபிலிம் ஒட்டுவதும் வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவு குறைக்கும். அதேபோன்று, இரண்டு பக்க விண்ட் ஷீல்டு கண்ணாடிகளிலும் அதற்கான திரையை வாங்கி பொருத்தி வைப்பதுடன், மிருதுவான துணிகளை போட்டு போர்த்தி வைப்பதும் பலன் தரும்.

பாதுகாப்பு கருவி

பாதுகாப்பு கருவி

வெளியில் நிறுத்தியிருக்கும் கார்கள் எளிதாக திருடு போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, கண்டிப்பாக, அலாரம் பொருத்துவதும் அவசியம்.

அலுவலக பார்க்கிங்

அலுவலக பார்க்கிங்

அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். குறைந்த தூரமே இருந்தாலும், காரை கொண்டு சென்று பார்க்கிங் நிறுத்திவிட்டால், காருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். இதனால், சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து சற்று விடுதலை பெறும் வாய்ப்புள்ளது.

மற்றொரு உபாயம்

மற்றொரு உபாயம்

தற்போது பல இடங்களில் கார் பார்க்கிங் இடம் மாத வாடகைக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்துவதும் சிறந்தது. திறந்தவெளி கார் பார்க்கிங் பகுதிகளுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், மூடப்பட்ட கார் பார்க்கிங் இடங்கள் மாதம் ரூ.2,500 வரை வாடகைக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்துவது உத்தம். எனவே, கார் வாங்கும்போதே இந்த இடத்தை தேர்வு செய்து கொள்வது சிறந்தது.

ரிஸ்க் எடுக்காதீர்

ரிஸ்க் எடுக்காதீர்

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில் பலர் காரை பார்க்கிங் செய்துவிடுகின்றனர். இதனால், அந்த வழியாக இரு வாகனங்கள் கடக்கும்போது உங்கள் வாகனத்திலும் சேதமடையும் ஆபத்து உள்ளது. குறிப்பாக, சைடு மிரர்களை மடக்கி வைப்பது அவசியம். மிக நெருக்கடியான தெருக்களில் பார்க்கிங் செய்வதை தவிர்ப்பதும் நலம்.

அடுத்தவர் இடத்தில்...

அடுத்தவர் இடத்தில்...

பக்கத்து வீட்டின் கேட்டை மறைத்துக் கொண்டோ அல்லது வழக்கமாக வேறு ஒருவர் நிறுத்தும் இடத்திலோ நிறுத்திவிட்டு வந்து வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

வாசலில் காரை நிறுத்துவோர் சிசிடிவி கேமராவையும் பொருத்தி வைப்பதும் சிறந்த உபாயமாக இருக்கும். திருட்டு மற்றும் காரை சேதப்படுத்துவோரை அடையாளம் காண்பதற்கு இது ஏதுவாக அமையும். புகார் தருவதற்கும் ஆதாரமாக அமையும்.

Tamil
English summary
ABS Braking System Saved Bike Rider From Terrible Mishap.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more