ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறங்குகிறது அமெரிக்க பைக்…! கவிழ்தடித்து படுக்க போவது யார்?

ராயல் என்பீல்டு பைக்கிற்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது இரண்டு பைக்குகளை அடுத்த மாதம் இந்திய சந்தையில் களம் இறக்குகிறது. இந்த பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்கு டஃப் கொடுக்குமா? ந

By Balasubramanian

ராயல் என்பீல்டு பைக்கிற்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது இரண்டு பைக்குகளை அடுத்த மாதம் இந்திய சந்தையில் களம் இறக்குகிறது. இந்த பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்கு டஃப் கொடுக்குமா? நீண்ட கால ராயல் என்பீல்டு வரலாற்றை மாற்றியமைத்து மக்கள் மத்தியில் நல்ல விற்பனையை பெறுமா வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

ராயல் என்பீல்டு பைக் பற்றியும் அந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியாவில் இருக்கும் மவுசு பற்றியும் உங்களுக்கு சொல்லிதான் தெரியவேண்டும் என்பது இல்லை. அந்த காலத்தில் ஊரில் ஒரு சிலர் மட்டுமே வைத்துக்கொண்டு கெத்தாக வலம் வந்த ராயல் என்பீல்டு பைக் இன்று பலர் பயன்படுத்தும் வகையில் வளர்ந்து விட்டது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

இந்த ராயல் என்பீல்டிற்கு போட்டியாக பஜாஜ் நிறுவனம் டோமினோர் பைக்கை களம் இறக்கினர். டோமினோர் ராயல் என்பீல்டை விட என்னதான் சிறப்பாக இருந்தாலும் ராயல் என்பீல்டின் விற்பனையை டோமினோரால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

இந்நிலையில் ராயல் என்பீல்டிற்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த க்ளவ்லேண்ட் சைக்கிள் வெர்க்ஸ் என்ற நிறுவனம் அடுத்த மாதம் தனது இரண்டு பைக்குகளை ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது. இந்த பைக் குறித்த முழு விபரங்களை கீழே காண்போம் வாருங்கள்.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

க்ளவ்லேண்ட் நிறுவனம் தனது பைக்கை கடந்த பிப்., மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. தற்போது அந்நிறுவனம் தங்களது ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்பிட் ஆகிய இரண்டு வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது அக்., மாதம் அந்த பைக்கிற்கான புக்கிங்கை துவங்கவும் நவ., மாதம் முதல் அதை விற்பனைக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

இதற்காக அந்நிறுவனம் தங்களது சீனா ஏற்றுமதி தளத்தில் இந்தியாவில் அந்த பைக்கினற்காக பாகங்களை இறக்குமதி செய்து புனேவில் உள்ள அந்நிறுவனத்தின் தளத்தில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. க்ளவ்லேண்ட் நிறுவனம் உலகம் முழுவதும் 23 நாடுகளில் தங்களது வாகனத்தை விற்பனை செய்கிறது. அதில் இந்தியாவில் மட்டும் தான் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

புனேவில் அந்நிறுவனம் அமைத்துள்ள கட்டுமான தொழிற்சாலை ஆண்டிற்கு 35-40 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதில் முதல் ஆண்டில் குறைந்தது 30 சதவீத அளவில் உற்பத்தி நடக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

மேலும் பைக்கிற்கான எல்லா பாகங்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யாமல் சில பாகங்களை இந்தியாவிலேயே வாங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பைக்கிற்கான டயரை எம்ஆர்எப் அல்லது சியட் நிறுவனத்திடம் வாங்கவும், ஹெட்லைட் கிளஸ்டர் பாகத்தை இந்தியாவிலேயே தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

முதற்கட்டமான இந்த பைக் இந்தியாவில் உள்ள 10 டீலர்களிடம் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்குகள் தென்னிந்தியா மற்றும் மேற்கிந்திய பகுதிகளில் அதிக அளவிற்கு விற்பனையாகும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

அந்நிறுவனம் அறிவித்துள்ள பைக்குளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். அந்நிறுவனம் ஏஸ் டீலக்ஸ் என்ற பைக்கை அறிவித்துள்ளது. இது ரிட்ரோ பிளேவர்டு நேக்டு பைக், இது 229சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் எனவும். இது 15.4 பிஎஸ் பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

இந்த பைக்கில் கார்பரேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஸை பொருத்தவரை USD ஃபோர்கும், பின்புறம் இரண்டு ஷாக் அப்ஷர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் மொத்த எடை 133 கிலோவாகும்.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

மேலும் இந்த பைக்கில் டிஜிட்டல் ஓடோமீட்டர், டுவின் பிஸ்டன் பிரேக்ஸ், முன்பக்கம் 21 இன்ச், பின்பக்கம் 18 இன்ச் கொண்ட வீல்கள், முன் வீலில் 315மிமீ மற்றும் பின் வீலில் 220 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

மிஸ்பிட் பைக்கை பொருத்தவரை ஏஸ் டீலக்ஸ் பைக்கில் உள்ள அதே மெக்கானிக்கல் பாகங்களை தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக் மைல்டு கஃபே ரேஸர் ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடையும் அதை விட 21 கிலோ அதிகமாக இருக்கிறது. இதனால் ரோட்டில் செல்லும் போது ராயல் என்பீல்டிற்கு இணையான லுக்கை தரும்.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

க்ளவ்லேண்ட் சைக்கிள் வெர்க்ஸ் நிறுவனம் இந்த இரண்டு பைக்கையும் நவ. மாதம் முதல் இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வரும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் ஏஸ் டீலக்ஸ் மாடலுக்கு எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ 2.23 லட்சம் எனவும், மிஸ்பிட் மாடலுக்கு ரூ 2.49 லட்சம் எனவும் விலையை நிர்ணயித்துள்ளது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

முதல் கட்டமான இந்த பைக் நவிமும்பை, பெங்களூரு, கொச்சி, சென்னை, திருவனந்தபுரம், ஓசூர், சேலம், இந்தூர், ஆகிய பகுதியில் உள்ள 9 டீலர்களிடம் விற்பனைக்கு வருகிறது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

இந்த பைக் நேரடியாக ராயல் என்பீல்டிற்கு போட்டியாக விற்பனைக்கு வருவதால் இந்த இரண்டு பைக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த இரண்டு பைக்குகளை இன்ஜினை பற்றி பார்க்கும் போது ராயல் என்பீல்டு குறைந்தது. 350 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. ஆனால் இந்த க்ளவ் லேண்ட் மோட்டார் சைக்கிளில் 230 சிசி இன்ஜின் மட்டுமே உள்ளது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

மேலும் ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் ரூ 1.39 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலை முதல் இந்தியாவில் விற்பனையாகிறது, ஆனால் இந்த க்ளவ்லேண்ட் பைக்கின் விலை அதை விட சுமார் 1 லட்சம் ரூபாய் அதிகமாக இருக்கிறது. மேலும் ராயல் என்பீல்டு பைக்கின் மைலேஜை பொருத்தவரை 35 கி.மீ வரை மைலேஜ் கிடைப்பதாக அதை பயன்படுத்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் க்ளவ் லேண்ட் பைக்கின் மைலேஜ் குறித்து எந்த தகவலும் இல்லை.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

ஏற்கனவே ராயல் என்பீல்டிற்கு போட்டியாக தான் அமெரிக்காவின் ஹார்லி நிறுவனம் இந்தியாவில் அதன் விற்பனையை துவங்கியது. ஆனால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. ராயல் என்பீல்டின் விற்பனையையும் சரிக்க முடியவில்லை.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

இந்தியாவை பொருத்தவரை சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த விலை கொண்ட வாகனங்கள் தான் விற்பனையை தக்க வைக்க முடியும். அதே நிலையில் மிக குறைந்த விலை என்றால் தரமில்லாத பொருள் என்ற பெயரும் பெற்று விடும். இதை மனதில் வைத்து க்ளவ்லேண்ட் நிறுவனம் அதன் விலையை மாற்றியமைத்தால் இந்தியாவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ராயல் என்பீல்டிற்கு போட்டியாக களம் இறக்குகிறது அமெரிக்க பைக்…! கம்பீரமா நிற்க போவது யார்? கவிழ்தடித்து படுக்க போவது யார்?

எனினும் க்ளவ்லேண்ட் பைக்கின் மைலேஜ்கள், எதிர்காலத்தில் அந்த பைக்கிற்கு வரும் மாடிஃபிகேஷன் ஆப்ஷன்கள் எல்லம் இந்தியர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்திருந்தால் நிச்சயம் இந்த பைக்கும் இந்தியா ஆட்டோமொபைல் மார்கெட்டில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

இன்று இந்தியர்கள் மத்தியில் ராயல் என்பீல்டிற்கு நல்ல மார்கெட் இருந்தாலும் சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட பைக்கை ஒருவர் வாங்கி குப்பையில் வீசியுள்ளார். இந்த செய்தியை இங்கே கிளிக் செய்து படியுங்கள், அந்நிறுவனம் புதிதாக வெளியிட்ட போட்டோவை மேலே உள்ள ஆல்பத்தில் பாருங்கள்

English summary
American brand Cleveland bikes will come for sale in india. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X