விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!

By Saravana Rajan

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சூசகமாக தெரிவித்துள்ளார்.

விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!

உலகின் பாரம்பரியம் மிக்க ஜாவா மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனங்களை கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற தனது கீழ் செயல்படும் துணை நிறுவனம் மூலமாக மஹிந்திரா கையகப்படுத்தியது.

விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மஹிந்திரா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்தது. அத்துடன், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!

இந்தநிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார். இது இந்திய ஜாவா பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!

இருசக்கர வாகன மார்க்கெட்டில் சற்று பின்னடவை சந்தித்து வரும் மஹிந்திரா மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு ஜாவா பிராண்டு மூலமாக புது எழுச்சி கிடைக்கும். அத்துடன், மஹிந்திரா மோஜோ பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சினை ஜாவா பிராண்டிலும் பயன்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஜாவா 350 ஸ்பெஷல் மாடர்ன் கஃபே ரேஸர், ஜாவா 350 ஓஎச்சி ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜாவா பிராண்டில் மேலும் பல புதிய மாடல்களை களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, டீலர்ஷிப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது.

Most Read Articles

Tamil
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Indian automaker Mahindra & Mahindra acquired the Jawa and BSA brands in 2016 as part of its premium two-wheeler venture. The deal was finalised through its subsidiary Classic Legends Private Limited (CLPL). Now, Anand Mahindra has teased the Jawa Motorcycles in his latest tweet.
Story first published: Monday, July 2, 2018, 18:46 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more